மணிப்பூர் கலவரம் : பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண் கண்ணீர் பேட்டி
Manipur riots: Rape victim gives tearful interview
-
கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அளித்துள்ள பேட்டி
-
கழிவறைக்கு சென்ற நான் அங்கிருந்து கட்டிடத்தின் பின்புறமாக தப்பி சென்று சிறிய மலை குன்றிலிருந்து உருண்டு மெயின் ரோட்டுக்கு வந்தேன்.
இம்பால், ஜூலை 26
மணிப்பூரில் 2 மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வரும் நிலையில் அங்கு பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் பேட்டி
கடந்த மே மாதம் வன்முறை தொடங்கியபோது நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- என்னை 4 பேர் கொண்ட கும்பல் ஒரு வெள்ளை நிற காரில் தூக்கி மலைப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
பாலியல் பலாத்காரம்
அங்கு கார் டிரைவரை தவிர மற்ற 3 பேரும் என்னை சித்ரவதை செய்து தாக்கினர். பின்னர் 3 பேரும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். இரவு முழுவதும் சாப்பிட எதுவும் தரவில்லை. தண்ணீர் கூட கொடுக்கவில்லை. ஒரு இடத்தில் அடைத்து வைத்தனர். 12 மணி நேரத்திற்கும் மேலாக கயிற்றால் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தேன்.
இதையும் படியுங்கள் : பள்ளி கல்லூரிகளில் கழிவறை பற்றாகுறை
இதனால் மயக்கமடைந்த நான் திடீரென விழித்து பார்த்தபோது அந்த கும்பல் என்னை பாலியல் வன்கொடுமை செய்ததையும், கைகள் கட்டப்பட்டு அடைக்கப்பட்டு இருப்பதையும் அறிந்தேன். அவர்கள் நான் தப்பி செல்லாமல் இருப்பதற்காக காவலுக்கு சிலரை நிறுத்தி இருந்தனர். அதில் ஒருவரை அழைத்து நான் கழிவறைக்கு செல்ல வேண்டும் என கூறி கயிற்றை அவிழ்க்குமாறு தெரிவித்தேன்.
படுகாயங்களுடன் சாலையில் :-
முதலில் அவர் மறுத்தார். பின்னர் கயிற்றை அவிழ்த்து விட்டார். உடனே கழிவறைக்கு சென்ற நான் அங்கிருந்து கட்டிடத்தின் பின்புறமாக தப்பி சென்று சிறிய மலை குன்றிலிருந்து உருண்டு மெயின் ரோட்டுக்கு வந்தேன். படுகாயங்களுடன் சாலையில் நின்றபோது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது. அந்த முஸ்லிம் ஆட்டோ டிரைவர் நிலைமையை உணர்ந்து என்னை காய்கறிகளுக்குள் மறைத்து வைத்து பிஸ்னுபூர் காவல் நிலையம் நோக்கி சென்றார்.
அப்போது அந்த கும்பல் காரில் விரட்டி வந்தது. ஒரு வழியாக நான் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறினேன். இவ்வாறு அவர் கூறினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.