Home இந்தியா இந்தியா தான் இந்தியாவுக்கு விடியலைத் தரமுடியும் | மு .க . ஸ்டாலின்

இந்தியா தான் இந்தியாவுக்கு விடியலைத் தரமுடியும் | மு .க . ஸ்டாலின்

0
இந்தியா தான் இந்தியாவுக்கு விடியலைத் தரமுடியும் | மு .க . ஸ்டாலின்

இந்தியாதான் இந்தியாவுக்கு விடியலைத் தரமுடியும் | மு .க . ஸ்டாலின்

I N D I A can give dawn to India | M.K Stalin

  • பா.ஜ. கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைவிடப் பெருமளவு குறைவாகவே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு

  • தி.மு.க எனும் பேரியக்கம், நமது மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாடு முழுவதற்குமான விடியலைத் தர வேண்டிய பொறுப்பில் பங்கேற்றிருக்கிறது.

சென்னை, ஆக. 28

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழக உடன் பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:- 2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கொள்கைக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. அதற்கு உடன்பிறப்புகளாகிய உங்களின் ஓயாத உழைப்பும் – ஒற்றுமையான செயல்பாடும் முக்கியமான காரணமாகும்.

கலைஞர் அவர்களின் ஆட்சியின் தொடர்ச்சி

அதன் விளைவாக, தி.மு.க.வுக்குத் தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பலத்தை தமிழ்நாட்டு மக்கள் வழங்கினார்கள். என்னுடைய வெற்றிச் சான்றிதழை முத்தமிழறிஞர் கலைஞர் ஓய்வுகொள்ளும் இடத்தில் வைத்து, நன்றிக் காணிக்கை செலுத்திவிட்டு, பதவியேற்பு நிகழ்விலும் அவர் பெயரையும் சேர்த்தே உச்சரித்து, இது கலைஞர் அவர்களின் ஆட்சியின் தொடர்ச்சிதான் என்பதை உறுதி செய்தேன்.

பெருமளவு குறைவாகவே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு

வளர்ச்சிப் படிக்கட்டுகளில் தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இந்த வளர்ச்சி நீடிக்க வேண்டும் என்றால் தி.மு.கழகம் தொடர்ந்து ஆட்சி செய்கின்ற வாய்ப்பு அமைய வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் தங்களுக்கு எக்காலத்திலும் வெற்றி வாய்ப்பு இல்லாத தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதை மக்கள் அறிவார்கள். தங்கள் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைவிடப் பெருமளவு குறைவாகவே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள்.

26 கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி

இத்தகைய நிலையிலும், தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அயராமல் உழைக்கிறது திராவிட மாடல் அரசு. விடியல் வெளிச்சத்தை மக்கள் அனுபவிக்கிறார்கள். ஒன்றிய ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டால் தான், நமது மாநிலத்திற்குரிய நிதி ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கும். முழுமையான வெளிச்சம் பரவும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மதவாத இருட்டை விரட்டும் விடியல் தேவைப்படுகின்ற காலம் இது. அதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 26 கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே ஒன்றிய பா.ஜ.க அரசு அலறக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது.

இதையும் படியுங்கள் : தேசிய நல்லாசிரியர் விருது |தென்காசி மாவட்டத்தை  சேர்ந்த ஆசிரியர் மாலதி தேர்வு

உண்மையான இந்தியா நம் பக்கம் தான் இருக்கிறது. அந்த இந்தியாதான் இந்தியாவுக்கு விடியலைத் தரக்கூடிய வலிமை கொண்டதாக, 2024 பாராளுமன்றத் தேர்தலில் திகழும். இந்தியாவின் வெற்றி முழுமையடைய வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும். கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்த

இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி.. வெற்றி.. மகத்தான வெற்றி என்ற நிலை ஏற்பட்டதற்குக் காரணம் உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்புதான்.

ஒற்றுமையுடன் கூடிய உழைப்பு எப்போதுமே வெற்றி

உங்களின் ஆதரவு இருக்கும்வரை எந்தக்களத்திலும் உங்களில் ஒருவனான என்னால் வென்று காட்ட முடியும். ஒற்றுமையுடன் கூடிய உழைப்பு எப்போதுமே வெற்றியாக விளையும். கழக உடன்பிறப்புகள் அந்த ஒற்றுமையைக் கட்டிக்காத்து உழைத்திட வேண்டும் என்பது கழகத் தலைவர் என்ற முறையில் எனது அன்பு வேண்டுகோளாகும். உங்கள் கோரிக்கைகளைக் கவனிக்க நான் இருக்கிறேன். என் வேண்டுகோளை நிறைவேற்ற நீங்கள் இருக்கிறீர்கள். நம் உயிருக்கு உயிராகத் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் இருக்கிறது.

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவால் உருவாக்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட தி.மு.க எனும் பேரியக்கம், நமது மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாடு முழுவதற்குமான விடியலைத் தர வேண்டிய பொறுப்பில் பங்கேற்றிருக்கிறது. உங்கள் ஆதரவுடன் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற, உங்களில் ஒருவனான நான் ஆயத்தமாக இருக்கிறேன். காண்கின்ற களம் அனைத்திலும் வெற்றியைக் குவிப்போம். இவ்வாறு கடிதத்தில் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.