
மணிப்பூரில் பா.ஜ.க அலுவலகம் எரிப்பு |இணையத்தளம் முடக்கம்
bjp office fired in manipur | internet banned
-
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி நிலவ மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பிரேன்சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் பல்வாலை மணிப்பூர் மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு
மணிப்பூர், செப். 28
மணிப்பூரில் பா.ஜ.க அலுவலகம் எரிப்பு |இணையத்தளம் முடக்கம் :மணிப்பூரில் 2 மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மாணவர்கள் பேரணியாக சென்றபோது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.இதில் 30 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் மணிப்பூரில் உள்ள கவுபால் மாவட்டத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் மண்டல அலுவலகத்துக்கு சிலர் தீ வைத்தனர். இதில் பா.ஜனதா கட்சி அலுவலகம் எரிந்தது. மேலும் அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளையும், வாகனங்களையும் சிலர் அடித்து நொறுக்கினார்கள்.
இதையும் படியுங்கள் : நாகூரில் தமிழறிஞர்களுக்கு விருது – சாஹிப் ஜாதா அறக்கட்டளை வழங்கியது
மாணவர்கள் போராட்டம் காரணமாக அங்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி நிலவ மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பிரேன்சிங் கேட்டுக்கொண்டுள்ளார். 2 மாணவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது.
“குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்வோம்” என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் பல்வாலை மணிப்பூர் மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இவர் தற்போது காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மூத்த போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார்.
அவர் மணிப்பூரில் வன்முறையை தடுக்க அந்த மாநிலத்தில் பணியாற்றுவார் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.