Home செய்திகள் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவிகள் 3 தங்கம் உள்பட 30 இடங்களை கைப்பற்றி சாதனை

காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவிகள் 3 தங்கம் உள்பட 30 இடங்களை கைப்பற்றி சாதனை

0
காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவிகள் 3 தங்கம் உள்பட 30 இடங்களை கைப்பற்றி சாதனை

காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவிகள் 3 தங்கம் உள்பட 30 இடங்களை கைப்பற்றி சாதனை

Kayalpatnam wavoo waheeja college students won 30 places including 3 golds, a record

  • 18.07.2023 அன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான திரு. R.N ரவி அவர்களால் வழங்கப்பட்டது.

  • நான்கு மாவட்டங்களை சார்ந்த சுமார் 100 இணைப்பு கல்லூரி மாணவ மாணவியர் எழுதிய தேர்வில் எம் கல்லூரியில் பயின்ற 27 மாணவியர் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

திருநெல்வேலி, அக். 3

காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவிகள் 3 தங்கம் உள்பட 30 இடங்களை கைப்பற்றி சாதனை | திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 2019-2022 ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அப்பட்டியலில் பகுதி I, பகுதி II, பகுதி III, என அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியைச் சேர்ந்த 27 மாணவியர் 30 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

ஆங்கிலத்துறையச் சார்ந்த முஹம்மது நூர் அஸ்மா பகுதி I அரபு மொழிப் பிரிவிலும், பகுதி II ஆங்கில இலக்கியப் பிரிவிலும், ஜி. ஜே.மிராக்ளின் பிரைட்டி பகுதி III ஆங்கில இலக்கியப் பிரிவிலும், முதல் இடங்களைப் பெற்று 3 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

இந்த தங்கப் பதக்கங்களை கடந்த 18.07.2023 அன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர். என். ரவி வழங்கினார்.


மேலும் பகுதி I அரபு மொழிப் பிரிவில்
கணிதவியல் துறை மாணவிகளான
எஸ். என். கதீஜா ரிஃப்கா இரண்டாம் இடத்தையும்,
எச்.ஆயிஷா பர்ஹானா,
ஏ.கே.பாத்திமா தக்ஷின் ஆகியோர் மூன்றாம் இடத்தையும்,
இயற்பியல் துறை மாணவி
எம்.பாத்திமா மஹ்மூதா நான்காம் இடத்தையும்,
ஆங்கிலத்துறை மாணவிகளான
எம். ஏ. எல்.செய்யது ராபியா,
ஏ.ஜரீரா ரோஸன் ரிஃபத் ஆகியோர் மூன்றாம் இடத்தையும்,
எஸ். எம்.கதீஜா மஸ்கூரா ஐந்தாம் இடத்தையும்,
எம். என்.ஆமீனா முஸ்பிரா ஆறாம் இடத்தையும்,
எஸ்.எம்.ஏ.நபீஸத்துரல் மிஸ்ரியா,
ஏ. எஸ்.செய்யது ராபியா ஆகியோர் ஏழாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

பகுதி II ஆங்கில இலக்கியப் பிரிவில் ஆங்கிலத்துறை மாணவியரான
ஜி. ஜே. மிராக்ளின் பிரைட்டி ஏழாம் இடத்தையும், எச்.பாத்திமா ஸரின் பதினைந்தாம் இடத்தையும், பி.வனபிரியா,
ஐ.பாத்திமா சோபியா ஆகியோர் பதினாறாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

பகுதி III ஆங்கில இலக்கிய முதன்மைப் பாடப்பிரிவில் ஆங்கிலத்துறையச் சார்ந்த முஹம்மது நூர் அஸ்மா ஆறாம் இடத்தைப் பெற்றார். வணிக நிர்வாகவியல் துறை  முதன்மைப் பாடப் பிரிவில்
எம்.ஐ.ஆயிஷா நுஹா பதினான்காம் இடத்தையும், ஏ.ஜெய்னம்பு கதீஜா பதினேழாம் இடத்தையும், எஸ். என்.பாத்திமா பைஸா இருபதாம் இடத்தையும் கைப்பற்றி உள்ளனர்.

வணிகவியல் துறை முதன்மைப் பாடப்பிரிவில் எஸ்.எம்.பி. மரியம் அஸ்ரா பத்தொன்பதாம் இடத்தைப் பெற்றார்.

பொருளியல் துறை முதன்மைப் பாடப்பிரிவில் டி. நிஷி ஏழாவது இடத்தைப் பெற்றார். கணிப்பொறியியல் முதன்மைப் பாடப்பிரிவில் எம்.சந்தியா மேரி ஒன்பதாம் இடத்தையும், எஸ்.எச்.பாத்திமா ஜொஹாரா பதினான்காம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைப் பாடப்பிரிவில் ஆர்.ராஜேஸ்வரி பதினோராம் இடத்தையும், எம்.திருவண்ணாமலை பன்னிரெண்டாம் இடத்தையும்,
எம்.சந்தியா ரேணு பதினைந்தாம் இடத்தையும், வெங்கடேஸ்வரி பதினேழாம் இடத்தையும், வி.சுபா பத்தொன்பதாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100 இணைப்பு கல்லூரி மாணவ-மாணவிகள் எழுதிய தேர்வில் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் பயின்ற 27 மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

கல்லூரிக்குப் பெருமையைத் தேடித் தந்த மாணவிகளையும், அதற்கு துணைபுரிந்த துறைசார்ந்த பேராசிரியர்களையும் கல்லூரி நிறுவனர் அல்ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர் ரஹ்மான், கல்லூரிச் செயலர் ஹாஜி வாவு எம்.எம்.மொகுதஸீம், துணைச் செயலர் ஹாஜி ஹாஃபிஸ் வாவுஎஸ். ஏ. ஆர். அஹமது இஸ்ஹாக், கல்லூரி இயக்குநர் முனைவர். மெர்சி ஹென்றி, கல்லூரி முதல்வர் முனைவர் வி.ரமா ஆகியோர் பாராட்டினர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.