Wednesday, December 18, 2024

தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் சட்டசபை தேர்தல் தேதி வெளியீடு

தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் சட்டசபை தேர்தல் தேதி வெளியீடு

Telangana, Madhya Pradesh, Mizoram, Chhattisgarh and Rajasthan state assembly election dates announced

  • இம்முறை சத்தீஸ்கரில் மட்டும் 2 கட்டங்களாகவும் பிற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.

  • அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படுகிறது.

சென்னை, அக். 09

இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கிடையே தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் விரைவில் நிறைவடைவதால், அந்தந்த மாநிலங்ளில் நடைபெற வேண்டிய 2023க்கான சட்டசபை தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இதனை வெளியிட்டார். இம்முறை சத்தீஸ்கரில் மட்டும் 2 கட்டங்களாகவும் பிற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதையும் படியுங்கள் : வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு மசோதாவை நடப்பு கூட்டு தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் | அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 16.1 கோடி வாக்காளர்களில் 60.2 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மிசோரம் – நவம்பர் 7
சத்தீஸ்கர் (2 கட்டங்கள்) – நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 மத்திய பிரதேசம் – நவம்பர் 17 ராஜஸ்தான் – நவம்பர் 23 தெலுங்கானா – நவம்பர் 30
அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படுகிறது.

5 மாநிலங்களிலும் உள்ள தற்போதைய சட்டசபை நிலவரம்:

தெலுங்கானா – மொத்த இடங்கள்: 119 – ஆளும் கட்சி: பாரத் ராஷ்ட்ரிய சமிதி

மத்திய பிரதேசம் – மொத்த இடங்கள்: 230 – ஆளும் கட்சி: பா.ஜ.க.
சத்தீஸ்கர் – மொத்த இடங்கள்: 90 – ஆளும் கட்சி: காங்கிரஸ் ராஜஸ்தான் – மொத்த இடங்கள்: 200 – ஆளும் கட்சி: காங்கிரஸ்

மிசோரம் – மொத்த இடங்கள்: 40 – ஆளும் கட்சி: மிசோ தேசிய முன்னணி

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles