Home உலகம் தென் கொரியாவில் தமிழர் விஞ்ஞானி பிரபாகரனுக்கு சிறந்த குடிமகன் விருது

தென் கொரியாவில் தமிழர் விஞ்ஞானி பிரபாகரனுக்கு சிறந்த குடிமகன் விருது

0
தென் கொரியாவில் தமிழர் விஞ்ஞானி பிரபாகரனுக்கு சிறந்த குடிமகன் விருது

தென் கொரியாவில் தமிழர் விஞ்ஞானி பிரபாகரனுக்கு சிறந்த குடிமகன் விருது

Best Citizen Award for Tamil Scientist Prabhakaran in South Korea

  • முனைவர் பட்டம் பெற்றுள்ள டாக்டர் பிரபாகரன், தென் கொரியாவில் உள்ள ஷுங்க்புக் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில்  முதுகலை விஞ்ஞானியாக  பணியாற்றி வருகிறார்.

  • டாக்டர் பிரபாகரனுக்கு, சிறந்த குடிமகன் விருதை சியோங்ஜு ஹியுங்டியோக் காவல் துறையின் தலைவர் ஹாங் சியோக் ஜி வழங்கி பாராட்டுச் சான்றிதழும், நினைவுப் பரிசும் வழங்கினார்.

    சியோல், அக். 27

    தென் கொரியாவில் தமிழர் விஞ்ஞானி பிரபாகரனுக்கு சிறந்த குடிமகன் விருது : தென் கொரியாவில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் தமிழரான டாக்டர் பிரபாகரனுக்கு அந்நாட்டு காவல்துறை சிறந்த குடிமகன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

    DR. PRABHAKARAN ph.d best citizen award

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பொன்னாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் பிரபாகரன். முனைவர் பட்டம் பெற்றுள்ள டாக்டர் பிரபாகரன், தென் கொரியாவில் உள்ள ஷுங்க்புக் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில் முதுகலை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

Best Citizen Award for Tamil Professor Prabhakaran in South Korea
Best Citizen Award for Tamil Professor Prabhakaran in South Korea

டாக்டர் பிரபாகரன், 2012 ஆண்டு முதல் இன்று வரை ஷுங்க்புக் தேசிய பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இவர் சியோங்ஜு ஹியுங்டியோக் மாகாண காவல்துறையுடன் இணைந்து, ஏராளமான தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, போதை பழக்கத்துக்கு எதிர்ப்பு, கொரானா காலத்தில் தொலைபேசி குரல் முறைகேடுகள் குறித்த விழிப்புணர்வு உள்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்.

இதையும் படியுங்கள் : சேலத்தில் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு | உதயநிதி ஸ்டாலின் அழைப்பு

இதனிடையே கடந்த 18ந் தேதி கொரிய குடியரசின் சியோங்ஜு ஹியுங்டியோக் மாகாண காவல் நிலையத்தில் 78வது போலீஸ் தின விழா கொண்டாட்டப்பட்டது.

Best Citizen Award for Tamil Professor Prabhakaran in South Korea
Best Citizen Award for Tamil Professor Prabhakaran in South Korea

இந்த நிகழ்ச்சியின்போது குரல் ஃபிஷிங்கிற்கு எதிராக தன்னார்வத் தொண்டு செய்ததற்காக டாக்டர் பிரபாகரனுக்கு, கொரிய தேசிய போலீஸ் ஏஜென்சி, சிறந்த குடிமகன் என்ற பெருமைமிகு விருது  வழங்கி கவுரவித்தது.  இந்த விருதை பெற்ற முதல் இந்தியரும், தமிழரும் ஆவார் இவர்.

விஞ்ஞானி டாக்டர் பிரபாகரனுக்கு, சிறந்த குடிமகன் விருதை சியோங்ஜு ஹியுங்டியோக் காவல் துறையின் தலைவர் ஹாங் சியோக் ஜி வழங்கி பாராட்டுச் சான்றிதழும், நினைவுப் பரிசும் வழங்கினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.