Home செய்திகள் வணிக கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைப்பு ; வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

வணிக கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைப்பு ; வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

0
வணிக கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைப்பு ; வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
commercial cylinder

வணிக கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைப்பு ; வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

A reduction of Rs.4.50 per commercial gas cylinder; Domestic cylinder prices remain unchanged

  • சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

  • கடந்த டிசம்பர் 22-ந்தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.39 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.4.50 குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜன. 01

சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள் : மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் : பணியாளர் அட்டையுடன் ஆதார் எண் இணைந்திருந்தால் மட்டுமே சம்பளம் பட்டுவாடா

ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. இந்நிலையில் இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1924.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த டிசம்பர் 22-ந்தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.39 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.4.50 குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் மாற்றமின்றி ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்