Sunday, January 5, 2025

தேர்தல் பிரச்சாரத்துக்காக ஏப்ரல் 12ம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழகம் வருகை

தேர்தல் பிரச்சாரத்துக்காக ஏப்ரல் 12ம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழகம் வருகை

Congress MP Rahul Gandhi visits Tamil Nadu on April 12 for election campaign

  • தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர்.

  • மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல்

Congress MP Rahul Gandhi visits Tamil Nadu on April 12 for election campaign

சென்னை, ஏப். 03மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஏப்ரல் 12ம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளார்.

Congress MP Rahul Gandhi visits Tamil Nadu on April 12 for election campaign
Congress MP Rahul Gandhi visits Tamil Nadu on April 12 for election campaign

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சுற்றுப்பயணம் செய்து வருகிறார். வரும் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சில இடங்களில் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.

இதையும் படியுங்கள் : தைவானில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை – ஜப்பான் வானிலை ஆய்வு மையம்

இதற்கிடையில் தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர். அந்த வகையில் பிரச்சாரத்துக்காக முதலில் ராகுல் காந்தி வரும் 12ம் தேதி தமிழகம் வரவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் வரும் ராகுல் காந்தி கோவை மற்றும் நெல்லை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதற்காக தனது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்காரர்களுடன் பேரணியாக சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் ராகுல்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles