Wednesday, December 18, 2024

விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ராக்கெட்

  • ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோமீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டம்

  • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவல்.

ஸ்ரீஹரிகோட்டா, பிப். 10

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக் கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது.

இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தவில்லை. இதனால் இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி – டி2 ரக ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.

இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கிலோமீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ராக்கெட் இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles