Wednesday, December 18, 2024

பார்த்திபனின் ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் தணிக்கை சான்றிதழ் உடன் வெளியிட்டு சாதனை

பார்த்திபனின் ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் தணிக்கை சான்றிதழ் உடன் வெளியிட்டு உலக சாதனை

Parthiban’s film ‘Teens’ released music and trailer with censor certificate, a world record

  • ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது

  • டீன்ஸ்’ திரைப்படத்தை தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் (கோயம்புத்தூர் தவிர) சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது

சென்னை, ஏப். 08

உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.

டிரெய்லரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இதை தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் ‘டீன்ஸ்’ திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது.

கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் ‘டீன்ஸ்’ தயாராகியுள்ளது.

கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார். விரைவில் வெளியாகயுள்ள ‘டீன்ஸ்’ திரைப்படத்தை தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் (கோயம்புத்தூர் தவிர) சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது, கோயம்புத்தூர் வெளியீட்டு உரிமையை எல்மா பிக்சர்ஸ் என். எத்தில்ராஜ் பெற்றுள்ளார்.

இத்திரைப்படத்திற்காக இசை அமைப்பாளர் D. இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி ஆகியோருடன் முதல் முறையாக இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இணைந்துள்ளார். ஆர். சுதர்சன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.

நடிகை பூர்ணிமா பாக்யராஜ் பேசியதாவது, “அனைத்தையும் புதுமையாக செய்பவர் பார்த்திபன். ‘டீன்ஸ்’ திரைப்படத்தையும் அவ்வாறே உருவாக்கியுள்ளார் எத்தனையோ புதிய திறமைகளை அவர் இப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. பார்த்திபனுக்கும் அவரது குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது, “புதுமை என்றாலே பார்த்திபன் தான். குழந்தைகளை வைத்து படம் எடுப்பது என்பது அத்தனை சுலபமான விஷயம் இல்லை. ஆனால் பார்த்திபன் அதை சாதித்து காட்டியுள்ளார்.

கடின உழைப்பாளியும் இறைபக்தி அதிகம் கொண்டவருமான இமான் இனிமையான பாடல்களை இப்படத்திற்கு வழங்கி உள்ளார். படத்தை பார்த்துவிட்டு இதில் பங்காற்றிய ஒவ்வொருவரையும் தனித்தனியாக வாழ்த்த காத்திருக்கிறேன், நன்றி.”

நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது, “என்னுடைய மகள் பார்த்திபன் சாரிடம் அசிஸ்டெண்டாக பணிபுரிகிறார் என்பது மிகவும் பெருமையான விஷயம். டிரெய்லரை பார்த்த உடனேயே இது கட்டாயமாக திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் என்பது புரிகிறது. இதில் நடித்துள்ள குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

” நடிகர் விதார்த் பேசியதாவது, “இப்படத்தின் டிரெய்லரும் பாடல்களும் அவ்வளவு அருமையாக உள்ளன.படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய பேசுகிறேன் நன்றி வணக்கம். ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் நிறைய பேசுகிறேன்.”

இதையும் படியுங்கள் : ஓசூர் அருகே தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ரூ. 30 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

இயக்குனர் நடிகர் கே பாக்யராஜ் பேசியதாவது, “நாளைய சூப்பர் ஸ்டார்களாக வளரப்போகும் ‘டீன்ஸ்’ படத்தில் நடித்துள்ள 13 இளம் கலைஞர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்.

என்னுடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த பார்த்திபன் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டு இருப்பது மிகவும் பெருமை. எப்போதுமே வித்தியாசமாகவும் புதுமையாகவும் சிந்திப்பவர் பார்த்திபன். அவரது இந்த ‘டீன்ஸ்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், நன்றி.”

இசையமைப்பாளர் D. இமான் பேசியதாவது, “இப்படி ஒரு இசை வெளியீட்டு விழாவை இதுவரை நான் பார்த்ததில்லை. அதற்காக பார்த்திபன் சாருக்கு நன்றி. இப்படத்தில் புதுமையான விஷயங்களை நிறைய முயற்சித்துள்ளோம்.

முதலில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் போதும் என்று இருந்த நிலையில் தற்போது அது ஏழு பாடல்களாக வளர்ந்துள்ளது. பார்த்திபன் சாரும் நானும் எப்போதோ இணைந்து பணியாற்றி இருக்க வேண்டியது, அது இப்போதுதான் கைகூடி உள்ளது. அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம், நன்றி.”

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles