சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் : வெற்றி பெற்ற அரன்செய் மு. அஷீப் நன்றி அறிக்கை
Chennai Pathirikaiyalar manda Election: Aransai M. Ashif’s Vote of Thanks
வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தேர்தலில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வாக்களித்த மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி -அரன்செய் மு. அஷீப்
புதிய பயணத்தில் உறுப்பினர்கள், எங்களுக்கு வழிகாட்டியாகவும் வழித்துணையாகவும் இருக்க வேண்டும் -அரன்செய் மு. அஷீப்
சென்னை, டிச. 16
சென்னை பத்திரிகையாளர் மன்ற புதிய நிர்வாகிகள் நேற்று (15.12.2004) நடைபெற்றது. மும்முனை போட்டிகளுக்கிடையே அரன்செய் மு. அஷீப் தலைமையிலான அணி 91 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
தேர்தல் வெற்றி குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற தலைவர் அரண்செய் அஷீப் அறிக்கை வேளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் 15.12.2004 அன்று நடைபெற்றது. மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற இந்த தேர்தலில் 91% வாக்குகள் பதிவாயின. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தேர்தலில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வாக்களித்த மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தேர்தலை மிகவும் வெளிப்படையாகவும், சிறப்பாகவும் நடத்திக்கொடுத்த ஓய்வுபெற்ற நீதியரசர் பாரதிதாசனுக்கும், அவரது குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த தேர்தல் நடைபெறுவதற்கு காரணமாக இருந்த வழிகாட்டுக் குழுவைச் சேர்ந்த அனைத்து மூத்த பத்திரிகையாளர்களுக்கும் எங்கள் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலில் போட்டியிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தேர்தல் முடிவுகள் 15.12.2004 அன்றே முறைப்படி அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதியரசர் பாரதிதாசன் சான்றிதழ்களை வழங்கினார். அதைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் நேற்றைய தினமே சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகக்குழு பதவி ஏற்றதை அடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், சமூக இயக்கங்களின் தலைவர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகக் குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
செய்து முடிக்க வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கக் கூடிய சூழ்நிலையில், இந்த புதிய பயணத்தில் எங்களுக்கு வழிகாட்டியாகவும் வழித்துணையாகவும் இருக்க வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு சென்னை பத்திரிகையாளர் மன்ற தலைவர் அரண்செய் அஷீப் தெரிவித்துள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்