Wednesday, December 18, 2024

பணியில் இருக்கும்போது இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி- முதல் அமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

பணியில் இருக்கும்போது இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி- முதல் அமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

A journalist who dies on duty, the family receives rs.10 lakh financial assistance – Chief Minister MK Stalin orders

  • பத்திரிகையாளர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 24 மணி நேரம் கூட முடிவடையாத நிலையில், பத்திரிகையாளர்கள் நலனுக்கான ஒரு முக்கியமான அரசாணை வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர்கள் குடும்ப உதவித்தொகையை உயர்த்தி உள்ளது தமிழக அரசு

  • முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தில் உதவி பெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையினைப் பெற்று இயக்குநர் செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை, டிச. 18

பணியில் இருக்கும்போது இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி- முதல் அமைச்சர் ஸ்டாலின் உத்தரவு : சென்னை பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, அடுத்த 24 மணி நேரத்துக்குள் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித்திட்டத்தில் உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மேலும் பத்திரிகையாளர்கள் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளையும் முதல்வர் ஸ்டாலினிடம் முன்வைத்தனர்.

இந்நிலையில், பத்திரிகையாளர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 24 மணி நேரம் கூட முடிவடையாத நிலையில், பத்திரிகையாளர்கள் நலனுக்கான ஒரு முக்கியமான அரசாணை வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர்கள் குடும்ப உதவித்தொகையை உயர்த்தி உள்ளது தமிழக அரசு.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகையாளர் நலன் கருதி, பத்திரிகைகளில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழைத்திருத்துபவர்கள் ஆகியோர் பணியில் இருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, குடும்ப உதவி நிதியாக பணி அனுபவத்துக்கு ஏற்ப ரூ. 5 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்தது.

இதையும் படியுங்கள்: கலைஞரின் கனவு இல்லம் திட்டம் : தமிழ்நாடு அரசு ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு விடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகளில் ஒன்றாக பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதியினை ரூபாய் பத்து லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரியிருந்தனர்.

அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000/- (ரூபாய் பத்து லட்சம் மட்டும்) என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000/- (ரூபாய் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயாணல் ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தில் உதவி பெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையினைப் பெற்று இயக்குநர் செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். பத்திரிகையாளர் ஒய்வூதிய பரிசீலனைக் குழுவே இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களையும் பரிசீலிக்கும். அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆணைகள் வெளியிடப்படும். இந்தத் திட்டத்திற்கான செலவினங்கள் “முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். இக்குடும்ப உதவி நிதி திட்டம் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் அமல்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles