
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி நாராயணன் பொறுப்பேற்பு
A scientist from Tamil Nadu takes charge as the chairman of the Indian Space Research Organization
இஸ்ரோ தலைவராக விஞ்ஞானி நாராயணன் பதவி ஏற்பு
இந்தியாவின் அடுத்த தலைமுறை ஏவுதள வாகனங்கள் உருவாக்கம் போன்ற திட்டங்கள் நடைபெறும் – இஸ்ரோ
பெங்களூரு, ஜன. 16
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும், விண்வெளித் துறையின் செயலாளராகவும் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி நாராயணன் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக இருந்த விஞ்ஞானி எஸ்.சோம்நாத் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நேற்று முன்தினம் புதிய தலைவராக விஞ்ஞானி நாராயணன் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். அவருக்கு சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : 1100 காளைகள், 900 வீரர்களுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : சீறி வந்த காளை முட்டி வீரர் பலி
விஞ்ஞானி நாராயணன் அடுத்த 2 ஆண்டுகள் இந்த பதவியில் நீடிப்பார். இவரது வழிகாட்டுதலின்படி இஸ்ரோவின் புதிய விண்வெளித்திட்டங்கள், ககன்யான் மனித விண்வெளிப் பயணம், விண்வெளியில் மிதக்கும் ஆராய்ச்சி மையம் அமைப்பது, இந்தியாவின் அடுத்த தலைமுறை ஏவுதள வாகனங்கள் உருவாக்கம் போன்ற திட்டங்கள் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்