
சங்கரன்கோவிலில் குடோனில் பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான குழந்தைகள் பிஸ்கட் பறிமுதல்
Expired children’s biscuits seized in sankarankoil-Food Safety Officer action
-
சங்கரன்கோவிலில் குடோன் ஒன்றில் பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான பிஸ்கட்கள் பறிமுதல்
-
குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 160 கிலோ காலாவதியான பிஸ்கட் பாக்கெட் பெட்டிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை
மதுரை, ஜன.21
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் குடோன் ஒன்றில் பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான குழந்தைகள் உண்ணும் பிஸ்கட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சங்கரன்கோவில் கீழ நாலாவது வீதியில் பெங்களூரு வில்கார்ட் சொலுஷன்ஸ் பி.லிட் நிறுவனத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது.
இதையும் படியுங்கள் : ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல் : சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு நள்ளிரவில் தள்ளுபடி

இங்கு தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி முஹமது அப்துல் ஹக்கீம் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு காலாவதியான குழந்தைகள் உண்ணும் 160 கிலோ பிஸ்கட் பாக்கெட்டுகள் பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .
சுமார் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான காலாவதியான பிஸ்கட் பாக்கெட் பெட்டிகளுக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி முஹமது அப்துல் ஹக்கீம், குடோன் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்