
மத்திய பட்ஜெட் 2025-26 : 36 மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு ;முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு
Union Budget 2025-26: Exemption of customs duty on 36 drugs; allocation of funds to key sectors
-
புற்றுநோய், அரிய பிற நோய்களுக்கான 36 மருந்துகள் விலை குறைய வாய்ப்பு
-
தொலைக்காட்சி மற்றும் செல்போன்களில் எதிரொலிக்கப்படலாம் என்பதால் அதன் விலை உயர வாய்ப்பு
டெல்லி, பிப்.01
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பல்வேறு பொருட்களுக்கான விலை உயர்கிறது. அதேபோல் சில பொருட்களுக்கான விலை குறைகிறது என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகின.
2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய தொடங்கினார். மதியம் 12.15 மணிக்கு பட்ஜெட் தாக்கலை முடித்தார்.
முக்கிய அறிவிப்புகள்
இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த பட்ஜெட் அறிவிப்பின்படி விலையேறும் மற்றும் விலை குறையும் பொருட்களின் விபரங்கள் வருமாறு:
சுங்க வரி விலக்கு
இந்த பட்ஜெட்டின்படி 37 க்கும் அதிகமான மருந்துகளின் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த மருந்துகளின் விலை குறைய உள்ளது. அதேபோல் புற்றுநோய், அரிய பிற நோய்களுக்கான 36 மருந்துகளுக்கும் அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதால் அதன் விலையும் குறைய உள்ளது. இதுதவிர கோபால்ட் புராடெக்ட்டுகள், எல்இடி, ஜிங்க், லித்தியம்-அயன் பேட்டரி ஸ்கிராப், உள்ளிட்டவற்றுக்கான அடிப்படை சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் அதன் விலையும் குறைய உள்ளது.
மேலும் 12 அரிய மினரல்கள் மீதான சுங்க வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் விலையும் குறைய உள்ளது. லெதர், ஜாக்கெட், ஷு, பெல்ட், பர்ஸ் உள்ளிட்டவற்றின் வரியும் குறைக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட மீன் பேஸ்ட் (சுரிமி) மீதான ஏற்றுமதி வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் எலக்ட்ரானிக் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள் : வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு
சுங்க வரி அதிகரிப்பு
ஊடாடும் பிளாட் பேனல் மீதான அடிப்படை சுங்க வரி என்பது 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. இதனால் வரி என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது.. இது தொலைக்காட்சி மற்றும் செல்போன்களில் எதிரொலிக்கப்படலாம் என்பதால் அதன் விலை உயர வாய்ப்புள்ளது. கூடுதலாக, நிதியமைச்சர் தற்காலிக மதிப்பீட்டிற்கான கால வரம்பை இரண்டு ஆண்டுகளாக நிர்ணயிக்க முன்மொழிந்தார்.
மத்திய அரசு, 2024 ஆம் ஆண்டில், மக்காத பிளாஸ்டிக்குகளுக்கான சுங்க வரியை 25 சதவீதமாக உயர்த்த முன்மொழிந்தது. குறிப்பிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கான அடிப்படை சுங்க வரியும் 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரித்தது. இதனால் அதன் விலை என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது.
நிதி ஒதுக்கீடு
பாதுகாப்பு – ரூ. 4.91 லட்சம் கோடி ஊரக வளர்ச்சி- ரூ. 2.6 லட்சம் கோடி சுகாதாரம்- ரூ. 98.311 கோடி. சமூக நலன்- ரூ. 60052 கோடி. உள்துறை – ரூ.2.3 லட்சம் கோடி. தகவல் தொடர்பு- ரூ. 95298 கோடி. கல்வி- ரூ.1.28 லட்சம் கோடி. வேளாண்மை- ரூ. 1.7 லட்சம் கோடி. நகர்ப்புற வளர்ச்சி- ரூ. 96777 கோடி. வணிகம் , தொழிற்துறை- ரூ. 65553 கோடி. அறிவியல்- ரூ. 55679 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.