
சமத்துவ நாள் விழா : அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Equality Day Celebrations: Chief Minister M.K. Stalin garlands Ambedkar statue
-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றார்
-
நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கருடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க, நாம் அனைவரும் பாடுபடுவோம்
சென்னை, ஏப். 14
டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் தமிழ்நாடு அரசு சார்பில் சமத்துவ நாள் விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உருவப்படத்துக்கு மலர் தூவி வணங்கினார். அங்கு அவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக அமைச்சர்கள் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றார். உறுதி மொழியை அவர் வாசிக்க அங்கிருந்த அனைவரும் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றனர். அந்த வாசகம் வருமாறு:-
சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கருடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க, நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன். இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்