
தமிழக அரசின் “தமிழ் வெல்லும்” பல்சுவை போட்டி:
கவிதை பிரிவில் தென்கொரிய முனைவர் ஞானராஜூக்கு விருது
Tamil Government’s “Tamil Vellum” Palsavai Competition:
South Korean Doctor Gnanaraju wins award in poetry category
- உலகெங்கிலும் இருந்து 2,198 பேர் மின்னஞ்சல் மற்றும் QR code வாயிலாக தங்கள் படைப்புக்களை அனுப்பினர்.
- கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முனைவர் தே. ஞானராஜ், தற்போது தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் (SKTRA ) செயலாளராக பங்காற்றி வருகிறார்.
சென்னை, ஜூலை. 04-
தமிழக அரசின் “தமிழ் வெல்லும்” பல்சுவை போட்டி: கவிதை பிரிவில் தென்கொரிய முனைவர் ஞானராஜூக்கு விருது: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் “தமிழ் வெல்லும்” எனும் தலைப்பில் பல்வேறு போட்டிகளை நடத்தியது.
இதில் கவிதை போட்டியில் உலகெங்கிலும் இருந்து 2,198 பேர் மின்னஞ்சல் மற்றும் QR code வாயிலாக தங்கள் படைப்புக்களை அனுப்பினர். “தமிழே, தமிழர் உயிரே!” எனும் தலைப்பில் முனைவர் தே. ஞானராஜ் எழுதிய கவிதை வெற்றி கவிதைகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 3-ந் தேதி அன்று நடை பெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முனைவர் தே. ஞானராஜ், தற்போது தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் (SKTRA ) செயலாளராக பங்காற்றி வருகிறார். அவர் தமிழ்-ஆங்கிலம் என பன்மொழி புலமையும், சமூக பற்றும் கொண்டவர்.
அவர் எழுதிய “Two Portraits of Tamil: Decoding the Iconography, Identity and Ideology” எனும் ஆங்கில கட்டுரை “News click” மற்றும் “Indian Cultural Forum” போன்ற ஊடகங்களில் வெளியானது.
கவிதை போட்டியில் வெற்றி பெற்ற முனைவர் தே. ஞானராஜூக்கு தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு வாழ்த்து தெரிவித்து இருக்கிறது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்