
-
மக்கள் வாக்களிக்க வசதியாக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது
-
2 மணி நேரத்துக்கு ஒருமுறை தேர்தல் நிலவரம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு
ஈரோடு, பிப். 27
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வே.ரா. மறைவு காரணமாக இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.), மேனகா நவநீதன் (நாம் தமிழர்), ஆனந்த் (தே.மு.தி.க.) உள்பட 77 பேர் போட்டியிட்டுள்ளனர்.
மக்கள் வாக்களிக்க வசதியாக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது .
பதினோரு மணி நிலவரப்படி 28 % வாக்குகள் பதிப்பிவாகிருந்தது. பொது மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வெயில் அதிகமாக இருந்ததால் வாக்காளர்கள் வசதிக்காக அனைத்து வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் போடப்பட்டுள்ளது. ஆங்காங்கு குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது.
இதையும் படியுங்கள் : தேஐஸ் அதிவிரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் : தொடங்கி வைத்த எல்.முருகன், டி.ஆர்.பாலு
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. ஓட்டுப்பதிவு சுமூகமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
சில இடங்களில் பெரிய அளவில் மக்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பொதுமக்கள் சுதந்திரமாக, நியாயமாக ஓட்டுப்போட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தேர்தல் நிலவரம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்ளனர்.
இவ்வாறு தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் கூறினார்.
வாக்கு பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவனும் , அதிமு க வேட்பாளர் தென்னரசுவும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.