-
இந்தியா உள்பட உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.
-
ஹர்ஷ் தனது சமூக வலை தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நான் ஏன்?” “திறமைக்கு இடம் இல்லையா…?” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐதராபாத், பிப். 28
மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது.
ஏற்கனவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.
இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த ஹர்ஷ் விஜய் வர்கியா என்பவரை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கி உள்ளது. சிறந்த பணியாளர் என்று விருது வாங்கிய அவரை பணியில் இருந்து கூகுள் நீக்கியது.
இதையும் படியுங்கள் : கனடா நாட்டில் டிக்-டாக் செயலிக்கு தடை
அது தொடர்பாக, ஹர்ஷ் தனது சமூக வலை தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நான் ஏன்?” “திறமைக்கு இடம் இல்லையா…?” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.