
நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார்
actor, director manobala passed away due to illness
-
தயாரிப்பாளராக, இயக்குனராக, காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக பல வேடங்களில் நடித்துள்ளார்.
-
இன்று அதிகாலை நெஞ்சு வலி அதிகம் ஆகவே அவர் மரணம் அடைந்தார்
சென்னை, மே .03
தயாரிப்பாளரும், பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலா (69) உடல்நலக்குறைவால் காலமானார். அவர் கடந்த சில நாட்களாக கடுமையான நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு வந்தார்.
திரையுலகில் பல முகங்கள்
நடிகர் மனோபாலா தமிழ் திரையுலகில் பல முகங்களை கொண்ட நடிகர். இவர் தயாரிப்பாளராக, இயக்குனராக, காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக பல வேடங்களில் நடித்துள்ளார்.
இவர் இதுவரை 40 படங்களை இயக்கி உள்ளார். 16 தொலைக்காட்சி தொடர்களை இயக்கி இருக்கிறார்.
200க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து இருக்கிறார். 69 வயதாகும் இவர் சதுரங்க வேட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்து உள்ளார். 1994ல் தாய்மாமன் என்ற படத்தில் இவர் அறிமுகம் ஆனார்.
உடல்நலக்குறைவு
இந்த நிலையில் இல்லத்தில் இன்று ஓய்வு எடுத்துக்கொண்டு மனோபாலா திடீரென மரணம் அடைந்தார். அவர் கடந்த சில நாட்களாக கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை இருந்தது. இந்த கல்லீரல் பிரச்சனை காரணமாக அவர் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கே சிகிச்சை முடித்த அவரை வீட்டில் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் கூறி உள்ளனர். அவருக்கு கல்லீரல் பிரச்சனையோடு கடந்த சில நாட்களாக கடுமையான நெஞ்சு வலியும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவரால் மூச்சு விட முடியாமல் திணறி உள்ளார்.
மனோபாலா மரணம்
அவரின் உறவினர்கள் ஊடகங்களில் அளித்த பேட்டியில், அவர் கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக மூச்சு விட முடியாமல் அவர் கடுமையாக திணறி வந்ததாக கூறப்படுகிறது.
அவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. இன்று அதிகாலை நெஞ்சு வலி அதிகம் ஆகவே அவர் மரணம் அடைந்தார்.கடந்த ஜனவரி மாதம் மனோபாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சி
இதுவே அவரின் மரணத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. தமிழ் சினிமா உலகை அவரின் மரணம் உடைத்து போட்டு உள்ளது. எல்லோருடனும் அன்புடனும், நட்புடனும் இருப்பவர் நடிகர் மனோபாலா. சினிமா உலகில் மிகவும் நல்ல பெயர் கொண்டவர் இவர். அப்படிப்பட்ட மனோபாலாவில் மரணம் சினிமா உலகில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சமீபத்தில் தான் பிரபல நடிகர் மயில்சாமி மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். மயில்சாமி மரணம் இன்னும் சினிமா உலகை விட்டு நீங்காத நிலையில் மனோபாலா மரணம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்