Home இந்தியா மே.வங்கத்தில் அடினோவைரஸ் பரவல்: 19 குழந்தைகள் பலி -மாஸ்க் அணிய மம்தா வலியுறுத்தல்

மே.வங்கத்தில் அடினோவைரஸ் பரவல்: 19 குழந்தைகள் பலி -மாஸ்க் அணிய மம்தா வலியுறுத்தல்

0
மே.வங்கத்தில் அடினோவைரஸ் பரவல்: 19 குழந்தைகள் பலி -மாஸ்க் அணிய மம்தா வலியுறுத்தல்
  • அடினோவைரசின் பாதிப்புக்கு 19 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என கூறிய அவர், அவர்களில் 13 பேர் இணை நோயால் பாதிப்பு

  • பொதுவான ஜலதோஷம் போன்ற பாதிப்பையும், காய்ச்சல், வறண்ட தொண்டை, நுரையீரல் பாதிப்பு, நிம்மோனியா, கண்கள் பிங்க் வண்ணத்தில் நிறம் மாறுதல், வாந்தி, குமட்டல், வயிற்று போக்கு உள்ளிட்ட வயிறு மற்றும் குடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட கூடும்

கொல்கத்தா, மார்ச் 06

மேற்கு வங்காளத்தில் பரவி வரும் அடினோவைரசின் பாதிப்புக்கு குழந்தைகள் அதிக இலக்காகின்றனர். அவர்களில் பலர் உயிரிழந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி கூறும்போது,

குழந்தைகள் யாரும் பயப்பட வேண்டாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார். அடினோவைரசின் பாதிப்புக்கு 19 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என கூறிய அவர், அவர்களில் 13 பேர் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், ஒரு குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அந்த குழந்தைக்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் காணப்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டியது அவசியம் என்றும் மம்தா அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படியுங்கள் : சிறு வயதில் தந்தையால் பாலியல் சித்திரவதை அனுபவித்த குஷ்பு

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த அடினோ வைரசானது, லேசானது முதல் கடுமையான பாதிப்புகளை உடலில் சுவாச பகுதியில் ஏற்படுத்த கூடிய ஒரு வகையை சேர்ந்தது.

அது எந்த வயது குழந்தையையும் பாதிக்க கூடியது. புதிதாக பிறக்கும் மற்றும் இளம் குழந்தைகளிடையே அது பரவலாக காணப்படும். கடுமையான பாதிப்பின்போது அறிகுறிகளாக, பொதுவான ஜலதோஷம் போன்ற பாதிப்பையும், காய்ச்சல், வறண்ட தொண்டை, நுரையீரல் பாதிப்பு, நிம்மோனியா, கண்கள் பிங்க் வண்ணத்தில் நிறம் மாறுதல், வாந்தி, குமட்டல், வயிற்று போக்கு உள்ளிட்ட வயிறு மற்றும் குடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட கூடும் என தெரிவித்து உள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.