
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இன்று முதல் ஜூன் 20-ம் தேதி வரை நேரடி முறையில் கலந்தாய்வு -கல்லூரி கல்வி இயக்குநரகம்
admission to government arts and science colleges direct consultation from today to june 20 – directorate of college education
-
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள்
-
கூடுதல் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை, மே. 29
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன. அவற்றில் சேர 2 லட்சத்து 44,104 மாணவர்கள் விண்ணப்பித்தனர். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் ஜூன் 20-ம் தேதி வரை நேரடி முறையில் நடைபெறுகிறது.
சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான சேர்க்கை
முதல் 2 நாட்கள் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான சேர்க்கை நடைபெறும். பொது கலந்தாய்வு முதல்கட்டமாக ஜூன் 1 முதல் 10-ம் தேதி வரையும், 2-ம் கட்டமாக ஜூன் 12 முதல் 20-ம் தேதி வரையும் நடைபெறும்.
செல்போன் எண், மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி
தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவர்களின் செல்போன் எண், மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வாயிலாக கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள் : மணிப்பூர் வன்முறை : ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் 40 பேர் சுட்டுக் கொலை
www.tngasa.in
பிளஸ் 2 மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்கு பாடப் பிரிவுகள் ஒதுக்கப்பட உள்ளன. கூடுதல் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், சந்தேகங்களுக்கு விண்ணப்பித்த கல்லூரிகளை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.