
சாலை மறியலை அடுத்து பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் | பாரதிய கிசான் சங்கம்
After the road blockade, the protest to besiege the houses of the BJP leaders | Bharatiya Kisan Sangh
-
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த நவம்பர் 26ம் தேதி முதல், ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக விவசாய சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
டெல்லி, அக். 12
பல மாதங்களாக போராடிவரும் விவசாய சங்கத்தினர், போராட்டத்தின் அடுத்த கட்டமாக இன்று நடைபெற உள்ள போராட்டத்தின் போது, ரயில்களை மறிக்கப் போவதில்லை என்று, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த நவம்பர் 26ம் தேதி முதல், ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக விவசாய சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : எம்.ஆர்.பி. மூலம் ஒப்பந்ததார செவிலியர்கள் பணியமர்த்த நடவடிக்கை | அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அதன்படி, இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜெய்ப்பூர் – டெல்லி சாலையை மறித்து போராட்டம் நடத்தப்படும் என்றும், அடுத்தடுத்த நாட்களில் மற்ற சாலைகளும் படிப்படியாக மறிக்கப்படும் என்றும், பாரதிய கிசான் சங்கத் தலைவர் பல்வீர் சிங் ரஜேவால் தெரிவித்துள்ளார்.
எனினும், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை அடுத்து வரும் நாளை மறுநாள் பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும், பல்வீர் சிங் ரஜேவால் தெரிவித்துள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.