
-
அதி.முக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு சார்பாக மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
-
பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவசர ஆலோசனை
சென்னை, மார்ச் 18
அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு சார்பாக மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதற்கு பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினமான நாளை காலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இதையும் படியுங்கள் : அ.தி.மு.க. சட்ட விதியை மீறி பிக்பாக்கெட் அடித்து செல்வது போல பொதுச்செயலாளர் தேர்தல் – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட நாளையுடன் விருப்ப மனு தாக்கல் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.