Home சினிமா நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் காலமானார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் காலமானார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

0
நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் காலமானார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ajith kumar father mother

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் காலமானார்

ACTOR AJITHKUMAR’S FATHER DIES AT 84 IN CHENNAI-CM TWEETS CONDOLENCE

சென்னை, மார்ச் .24

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். 85 வயதான சுப்பிரமணியம் கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

actor ajith kumar father mother
ajith kumar father mother

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்தின் தந்தை மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்மதுரையில் தமிழக முதலமைச்சரின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சிய கண்காட்சி: கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கண்டு வியந்தனர்

ajithkumar with his mother

அதில், “நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.

cm tweets on ajith,s father condolence
cm tweets on ajith,s father condolence

 

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.