
அனைத்து ரயில்களும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மேலூரில் நிற்காது – தென்னக ரயில்வே
ALL TRAINS WILL NOT STOP IN MELUR TILL APRIL.30- SOUTHERN RAILWAY
-
தூத்துக்குடி – மேலூர் ரயில் நிலையமானது புதிய பேருந்து நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்படுகிறது. அங்கு ரயில்கள் நின்று செல்லும் வகையில், மேலூர் ரயில் நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
-
சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் விரைவு ரயில், மைசூரில் இருந்து தூத்துக்குடி வரும் ரயில், திருநெல்வேலி முதல் தூத்துக்குடி வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மேலூர் ரயில் நிலையத்தில் நிற்காது” என தெரிவித்துள்ளார்.
மதுரை, ஏப்ரல் 01
தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட இயக்க மேலாளர் ஜோசப் மேத்யூ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “மதுரை – தூத்துக்குடி இடையிலான இரட்டை வழி ரயில் பாதை மீளவிட்டான் முதல் தூத்துக்குடி ரயில் நிலையம் வரை தண்டவாளங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலூர் ரயில் நிலையம் அமைக்கும் பணி
இப்பணியில், தூத்துக்குடி – மேலூர் ரயில் நிலையமானது புதிய பேருந்து நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்படுகிறது. அங்கு ரயில்கள் நின்று செல்லும் வகையில், மேலூர் ரயில் நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் : மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
இந்த பணியை மார்ச் மாத இறுதிக்குள் முடித்து ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த புதிய ரயில் வழித்தடத்தில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்த போதும், சில பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ரயில்கள் நின்று செல்லாது
இந்த நிலையில் இந்தப் பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகளை விரைவுப்படுத்துவதற்கு வசதியாக தூத்துக்குடி-மேலூர் ரயில் நிலையத்தில், இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு ரயில்கள் நின்று செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலூர் ரயில் நிலையத்தில் நிற்காது”
சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் விரைவு ரயில், மைசூரில் இருந்து தூத்துக்குடி வரும் ரயில், திருநெல்வேலி முதல் தூத்துக்குடி வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மேலூர் ரயில் நிலையத்தில் நிற்காது” என தெரிவித்துள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.