Wednesday, December 18, 2024

அமெரிக்காவில் கடும் சூறாவளிகள்; 32 பேர் பலி ; பெரும் சேதம் 

அமெரிக்காவில் கடும் சூறாவளிகள்; 32 பேர் பலி ; பெரும் சேதம் 

AMERICA HARDLY HIT BY STORMS ; DEATH COUNT 32

  • உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் சூறாவளியால் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 100க்கும் அதிகமான மக்கள் காயமடைந்துள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கும் என்று நம்புவோம்.

நியூயார்க், ஏப். 03

அமெரிக்காவை அடுத்தடுத்து கடுமையான சூறாவளிகள் புரட்டிப்போட்ட நிலையில் அங்கே இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். சூறாவளிகளால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அதிசக்தி வாய்ந்த சூறாவளி

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”அமெரிக்காவின் மிஸிஸிப்பி மற்றும் அலபாமா மாகாணங்களில் கடந்த வாரம் வீசிய அதிசக்திவாய்ந்த சூறாவளி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. சுமார் 23 பேர் வரை உயிரிழந்தனர்.

கடுமையான பாதிப்பு 

இந்த நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மீண்டும் அமெரிக்காவை சூறாவளிகள் தாக்கியது. இதில் மெம்பிஸ், டென்னஸி ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் வீசிய சூறாவளிகளுகக்கு இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர்.

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் சூறாவளியால் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 100க்கும் அதிகமான மக்கள் காயமடைந்துள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்டெல்லியில் இன்று அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு ;  தலைமை உரையாற்றுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேலும், அரக்கன்சாஸ், இல்லினாய்ஸ், இண்டியானா, டெலாவேர் ஆகிய மாகாணங்கலும் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிபர் ஜோ பைடன் நேரில் ஆய்வு

இந்த நிலையில் சூறாவளி பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் அதிபர் ஜோ பைடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு வேண்டிய உதவிகளை அரசு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கும் என்று நம்புவோம்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles