Home உலகம் உளவு பார்த்ததாக அமெரிக்க செய்தியாளர் கைது – ரஷ்ய உளவுப் பிரிவு

உளவு பார்த்ததாக அமெரிக்க செய்தியாளர் கைது – ரஷ்ய உளவுப் பிரிவு

0
உளவு பார்த்ததாக அமெரிக்க செய்தியாளர் கைது – ரஷ்ய உளவுப் பிரிவு
american journalist

 

உளவு பார்த்ததாக அமெரிக்க செய்தியாளர் கைது – ரஷ்ய உளவுப் பிரிவு

an american reporter arrested for espionage – fsb

 

  • இவான் கார்ஸ்கோவிச் என்ற அந்த பத்திரிகையாளர் யூரல் மலைப்பகுதியின் யெகாடரின்பர்க் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டதாக எஃப்எஸ்பி (The Federal Securiy Service) எனப்படும் ரஷ்ய உளவுப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

  • கெர்ஸ்கோவிச் என்றைக்கு கைது செய்யப்பட்டார் என்ற தகவலை ரஷ்யா தெரிவிக்கவில்லை. இந்தக் குற்றம் உறுதி செய்யப்பட்டால் இவான் கெர்ஸ்கோவிச் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்கக்கூடும்.

மாஸ்கோ, மார்ச்.31

உளவு பார்த்த குற்றத்துக்காக அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இவான் கார்ஸ்கோவிச்

இவான் கார்ஸ்கோவிச் என்ற அந்த பத்திரிகையாளர் யூரல் மலைப்பகுதியின் யெகாடரின்பர்க் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டதாக எஃப்எஸ்பி (The Federal Securiy Service) எனப்படும் ரஷ்ய உளவுப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

wall street journal
wall street journal

இதையும் படியுங்கள்கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் : குற்றச்சாட்டு உறுதியானால் நடவடிக்கை- முதலமைச்சர் ஸ்டாலின்

இவான் கெர்ஸ்கோவிச் சில ரகசியத் தகவல்களை இடைமறித்து சேகரிக்க முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது

பனிப்போர் காலத்திற்குப் பின்னர் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் ரஷ்யாவால் உளவுக் குற்றத்திற்காக கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உளவு வேலை

உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா, ரஷ்யா இடையே உறவுச் சிக்கல் வலுத்தள்ள நிலையில் இந்தக் கைது நடவடிக்கை நடந்துள்ளது. இவான் கெர்ஸ்கோவிச், அமெரிக்க அரசின் உத்தரவின் பேரிலேயே ரஷ்யாவில் உளவு வேலை பார்த்ததாகவும் எஃப்எஸ்பி அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சிறைத் தண்டனை

இருப்பினும் கெர்ஸ்கோவிச் என்றைக்கு கைது செய்யப்பட்டார் என்ற தகவலை ரஷ்யா தெரிவிக்கவில்லை. இந்தக் குற்றம் உறுதி செய்யப்பட்டால் இவான் கெர்ஸ்கோவிச் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்கக்கூடும்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.