
- இங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
- இந்நிலையில் அன்புஜோதி ஆசிரம வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம், பிப்.18
கேரளாவை சேர்ந்த ஜூபின் பேபி கடந்த 2003-ம் ஆண்டு குண்டலப்புலியூர் வந்தார். அங்கு மனநலம் குன்றியோருக்கு உதவும் பணிகளை செய்து வந்த இவர் 2005-ம் ஆண்டில் அறக்கட்டளை தொடங்கினார்.
சலீம்கான் என்பவர், இக்காப்பகத்தில் சேர்த்த வயதான தனது மாமாவை காணவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸாரும், வருவாய்துறையினரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தினர்.
இங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
இதையடுத்து ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உட்பட 203 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து காப்பகம் நடத்தி வந்த ஜூபின் பேபி கடந்த 2021-ம் ஆண்டில் போதை மறு வாழ்வு மையம் என்ற பெயரில் அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்தும் இதுவரை அனுமதி பெறாமல் இருந்ததாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை பெறுமா கைலாசா ?- திட்டங்களை தீட்டும் நித்தியானந்தா
காப்பகத்தை அனுமதி பெறாமல் தான் அவர் நடத்தி வந்ததாக தெரிவிக்கும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
குண்டலப்புலியூர் ஆசிரம வழக்கில் கர்நாடகா, ராஜஸ்தான் என வழக்கு விசாரணை பட்டியலில் வெவ்வேறு மாநிலங்களும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்களும் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.