-
எண்ணெய் ஆலை உரிமையாளர் அம்பாண்டி சுப்பண்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டேங்கரை 9 பேர் சுத்தம் செய்த நிலையில், 7 பேர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.
காக்கிநாடா, பிப் .09
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எண்ணெய் தொழிற்சாலையில் டேங்கரை சுத்தம் செய்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
டேங்கரை 9 பேர் சுத்தம் செய்த நிலையில், 7 பேர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். டேங்கரில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு தொழிலாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நேரில் பார்வையிட்டனர். மேலும், எண்ணெய் ஆலை உரிமையாளர் அம்பாண்டி சுப்பண்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.