அண்ணா பல்கலைக்கழகம் : வரும் கல்வியாண்டு முதல் 50 சதவீதம் கல்வி கட்டணம் குறைப்பு
Anna University: 50 percent tuition fee reduction from the academic year
-
அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் ஒரு சில பிரிவுகளை தவிர அனைத்து வகைகளுக்கும் நிலையான கட்டணம் 7,500 அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் 3750 அமெரிக்க டாலராக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்கனவே உள்ள கட்டணம் ரூ.6 லட்சத்து 23 ஆயிரமாக இருந்தது. வரும் கல்வி ஆண்டு முதல் ரூ.3 லட்சத்து 11ஆயிரமாக நிர்ணயித்துள்ளது.
சென்னை, ஜன. 05
சென்னை அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் 5 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் ஒரு சில பிரிவுகளை தவிர அனைத்து வகைகளுக்கும் நிலையான கட்டணம் 7,500 அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் : ஜனவரி 10ஆம் தேதி முதல் மேலும் 2 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன் பெறுவர்
வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் என்.ஆர்.ஐ.க்கள் கணினி அறிவியல் பொறியியல் (சி.எஸ்.இ.) தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி.) மற்றும் எலக்ட்ரா னிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் (இ.சி.இ.) உள்ளிட்ட 3 பாடப்பிரிவு களில் மட்டுமே சேருகிறார்கள். அதனால் இந்த 3 பாடப் பிரிவுகளுக்கான கட்டணத்தை 7,500 அமெரிக்க டாலராகவும் இவை தவிர எந்திர பொறியியல், சிவில் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிற கிளைகளுக்கு கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் 3750 அமெரிக்க டாலராக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்கனவே உள்ள கட்டணம் ரூ.6 லட்சத்து 23 ஆயிரமாக இருந்தது. வரும் கல்வி ஆண்டு முதல் ரூ.3 லட்சத்து 11ஆயிரமாக நிர்ணயித்துள்ளது.
50 சதவீதம் கட்டணத்தை குறைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. கல்வி கட்டணம் குறைப்பு நடவடிக்கை அதிக மாணவர்கள் தேர்வு செய்யாத படிப்புகளை பிரபலப்படுத்த உதவும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்