அண்ணா பல்கலைக்கழகம் : டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு
ANNA UNIVERSITY : TANCET EXAM RESULTS RELEASED
- டான்செட் (TANCET) என்பதற்கு தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு (Tamil Nadu Common Entrance Test)என்பது பொருள்
- இந்த தேர்வு முடிவுகள் tancet.annauniv.edu இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம்.
சென்னை, ஏப் .14
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்பு படிப்பதற்கான டான்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பது தொடர்பான முழுவிபரம் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள் : அரசியலுக்காக அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலை நான் பார்க்கவில்லை – அமைச்சர் துரை முருகன்
அண்ணா பல்கலைக்கழகம்
தமிழ்நாட்டில் அரசு, தனியார் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட முதுகலை படிக்க விரும்புவோருக்கு டான்செட் எனும் பொதுவான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. டான்செட் (TANCET) என்பதற்கு தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு (Tamil Nadu Common Entrance Test)என்பது பொருளாகும். இந்த நுழைவுத்தேர்வை ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
டான்செட் தேர்வு முடிவுகள்
2023ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு கடந்த மாதம் 25ம் தேதி நடந்தது. இந்நிலையில் தான் டான்செட் தேர்வு முடிவுகளை இன்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகள் tancet.annauniv.edu இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம். இந்த இணையதளம் சென்றபிறகு ரிசல்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு வரும் திரையில் ரோல் நம்பர் மற்றும் பிறந்ததேதியை குறிப்பிட்டால் போதும் ரிசல்ட் கிடைத்துவிடும்.
இந்த தேர்வு முடிவின் அடிப்படையில் மாணவ-மாணவிகள் நேர்க்காணலுக்கு அழைக்கப்பட உள்ளனர். இதுதொடர்பான விபரங்கள் பிறகு முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.