அரசியலுக்காக அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலை நான் பார்க்கவில்லை – அமைச்சர் துரை முருகன்
Annamalai releases property details list for political reasonsbut i didnt see- minister Durai murugan
-
காவிரி-குண்டாறு இணைப்பை நாங்கள் தான் செய்து வருகிறோம். வெளிநாட்டில் நிதி வாங்கி பணிகளை செய்து வருகிறோம்.
-
நிச்சயம் காவிரி-குண்டாறு இணைப்பு செயல்படுத்தப்படும்
வேலூர், ஏப் .14
அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதையும் படியுங்கள் : சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை அண்ணாமலை வெளியீடு
அதை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க.வில் உள்ள பெரும் தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அதை நான் பார்க்கவில்லை, எனக்கு அது தெரியாது. இதையெல்லாம் அரசியலுக்காக அவர் செய்கிறார்.
காவிரி-குண்டாறு இணைப்பை நாங்கள் தான் செய்து வருகிறோம். வெளிநாட்டில் நிதி வாங்கி பணிகளை செய்து வருகிறோம். தற்போது கால்வாய் வெட்டும் பணி நடந்து வருகிறது. சுமார் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. நிச்சயம் காவிரி-குண்டாறு இணைப்பு செயல்படுத்தப்படும் என்றார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.