Home செய்திகள் முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு 

முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு 

0
முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு 
anti corruption filed case against former minister sathya

முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு

 Anti-corruption police registered case against Former MLA T. Nagar Sathya

  • பதவிக்காலத்தில் அவர் ரூ.2.64 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

  • தி.நகர் சத்யா சென்னை, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், கும்மிடிப்பூண்டி, ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலும் சொத்துக்களை வாங்கி இருப்பது தெரிய வந்தது.

சென்னை, செப்.14

முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு : தி.நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தனது பதவிக்காலத்தில் அவர் ரூ.2.64 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

வழக்கு பதிவு

இதுதொடர்பாக வடபழனியில் உள்ள தி.நகர் சத்யாவின் வீடு, மற்றும் அவரது நண்பரான அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேசின் வீடு உள்பட 22 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

நேற்று சோதனையில் தி.நகர் சத்யா தனது பெயரிலும் மனைவி மற்றும் மகள் பெயரிலும் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் தி.நகர் சத்யா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

லஞ்ச ஒழிப்பு போலீசார் தி.நகர் சத்யா மற்றும் அவரது உறவினர்கள், அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் நடத்திய இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதையும் படியுங்கள் :  சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி மீது நஷ்ட ஈடு கேட்டு எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல்

தி.நகர் சத்யா சென்னை, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், கும்மிடிப்பூண்டி, ஆந்திரா உள்ளிட்ட இடங்களிலும் சொத்துக்களை வாங்கி இருப்பது தெரிய வந்தது.இதுதொடர்பாக ஏராளமான சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கை

இது தவிர வங்கி கணக்குகள் தொடர்பான ஆவணங்களும் தி.நகர் சத்யாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும் போது, தி.நகர் சத்யாவுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்திருக்கும் சொத்து ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

ஐகோர்ட்டு உத்தரவின் படி தி.நகர் சத்யா மீது போடப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.