Home கல்வி / கலை கல்லூரிகளுக்கிடையே உட்கட்டமைப்புகளை மேம்படுத்த பெருந்தலைவர் காமராஜர் திட்டத்திற்கு பாராட்டுக்கள் | சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர்

கல்லூரிகளுக்கிடையே உட்கட்டமைப்புகளை மேம்படுத்த பெருந்தலைவர் காமராஜர் திட்டத்திற்கு பாராட்டுக்கள் | சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர்

0
கல்லூரிகளுக்கிடையே உட்கட்டமைப்புகளை மேம்படுத்த பெருந்தலைவர் காமராஜர் திட்டத்திற்கு பாராட்டுக்கள் | சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர்

கல்லூரிகளுக்கிடையே உட்கட்டமைப்புகளை மேம்படுத்த பெருந்தலைவர் காமராஜர் திட்டத்திற்கு பாராட்டுக்கள் | சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர்

Appreciation for Perunthalivar Kamaraj’s scheme to improve infrastructure among colleges | President of samathuva makkal kalaga leader

  • தமிழக முதல் அமைச்சர்  காலை உணவு என்கிற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஒரு மகத்தான திட்டத்தை அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.

  • முதல் அமைச்சர் எடுக்கிற பல்வேறு நடவடிக்கைகள் பெருந்தலைவர் காமராஜர் பெயரிலேயே அமைந்திருக்க இந்த திட்டம் அமைந்துள்ளது

சென்னை, அக். 12

கல்லூரிகளுக்கிடையே உட்கட்டமைப்புகளை மேம்படுத்த பெருந்தலைவர் காமராஜர் திட்டத்திற்கு பாராட்டுக்கள் | சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர்: சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில், பெருந்தலைவர் காமராஜர் ஏழை எளிய மாணவர்கள், கற்பதற்காக கல்வி சாலைகளை திறந்து எண்ணற்ற பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர்.

மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதன் அடிப்படையிலேயே தற்போது சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல் அமைச்சர்  காலை உணவு என்கிற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஒரு மகத்தான திட்டத்தை அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

இதையும் படியுங்கள் : சாலை மறியலை அடுத்து பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் | பாரதிய கிசான் சங்கம்

தற்போது கல்லூரிகளுக்கிடையே உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் ஆயிரம் கோடி செலவில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் ஒரு சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனவும் உயர் கல்வியினுடைய வளர்ச்சிக்காக முதல் அமைச்சர் எடுக்கிற பல்வேறு நடவடிக்கைகள் பெருந்தலைவர் காமராஜர் பெயரிலேயே அமைந்திருக்க இந்த திட்டம் அமைந்துள்ளது எனவும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரி உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு அறிவித்துள்ள திட்டத்திற்கு எங்களது பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.