அரவிந்த் கெஜ்ரிவால் கைது: கீழ்த்தரமான அரசியல் கொடுங்கோன்மை – மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா கடும் கண்டனம்
Arvind Kejriwal’s arrest: low-grade political tyranny – Humanist People’s Party chief MH Jawahirullah strongly condemns
-
காங்கிரசின் வங்கிக் கணக்குகளை முடக்குவது, எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைப்பது போன்ற கொடுங்கோல் செயல்களின் தொடர்ச்சியே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதும்.
-
எதிரிகள் பத்துபேர் இருந்தாலும் அவர்களை எதிர்கொண்டு வெல்பவனே வீரன். அவனைப் போட்டிக்கே வர விடாமல் செய்துவிட்டு வெற்றி பெற முயலுவது கோழைத்தனம், அயோக்கியத்தனம். இதனை அச்சு பிறழாமல் செய்கிறது பாஜக.
சென்னை, மார்ச். 22
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை
நேற்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது. செய்யப்பட்டுள்ளது பாஜக அரசின் கீழ்த்தரமான அரசியல் கொடுங்கோன்மை நடவடிக்கையாகும்.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, அமலாக்கத் துறை என்னும் பாஜகவின் ஏவல் துறையின் உதவி மூலம், அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கையை அரங்கேற்றி உள்ளது மோடியின் பாசிச அரசு.
காங்கிரசின் வங்கிக் கணக்குகளை முடக்குவது, எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைப்பது போன்ற கொடுங்கோல் செயல்களின் தொடர்ச்சியே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதும்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை தொடர்ந்து மற்றொரு எதிர்க்கட்சி முதல்வரான டெல்லி மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது இங்கே கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
இத்தகைய எதேச்சதிகாரத்தின் உச்சத்தில் பாஜக உலவுவதற்குத் தேர்தல் தோல்வி பயமே காரணம் ஆகும்.
எதிரிகள் பத்துபேர் இருந்தாலும் அவர்களை எதிர்கொண்டு வெல்பவனே வீரன். அவனைப் போட்டிக்கே வர விடாமல் செய்துவிட்டு வெற்றி பெற முயலுவது கோழைத்தனம், அயோக்கியத்தனம். இதனை அச்சு பிறழாமல் செய்கிறது பாஜக.
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம், அரவிந்த் கெஜ்ரிவால் கைது ஆகிய எதேச்சதிகார நடவடிக்கைகள் தேர்தலுக்கு 30 நாட்கள் முன்னர் அரங்கேறுவதைக் காணும் போது, உச்சக்கட்டத் தேர்தல் தோல்வி பயத்தில் மோடியும் பாஜகவும் உள்ளது என்பது வெளிச்சமாகத் தெரிகிறது.
இதையும் படியுங்கள் : 2ஜி அலைக்கற்றை முறைகேடு மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு – டெல்லி உயர் நீதிமன்றம்
இந்தக் கைது நடவடிக்கைகள் காரணமாக இந்தியா கூட்டணியின் மீது மக்களின் நன்மதிப்பு அதிகரித்து வருகிறது என்பதே கள எதார்த்தம்.
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கின்றேன். ஜனநாயகத்தைச் சர்வாதிகாரத்தால் ஒருபோதும் வீழ்த்த முடியாது.
மோடி அரசின் எதேச்சதிகாரப் போக்கிற்கு தேர்தல் நாளில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கடும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்