
நாகூரில் தமிழறிஞர்களுக்கு விருது – சாஹிப் ஜாதா அறக்கட்டளை வழங்கியது
Awarded to Tamil Scholars in Nagore – Sahib Jada Foundation
-
தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர்களுக்கு 28-ந் தேதி (வியாழக்கிழமை) “தமிழ்ச்செம்மல் விருது”
-
அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் காமில் சாஹிப் விருதாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். சங்க தலைவர் தமிழ்ச்செம்மல் கலீபா சாஹிப் தலைமை வகித்தார்.
நாகூர்,செப் 28
நாகூரில் தமிழறிஞர்களுக்கு விருது – சாஹிப் ஜாதா அறக்கட்டளை வழங்கியது : மீலாது நபி விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து நாகூர் சாஹிப்ஜாதா அறக்கட்டளை சார்பில் தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர்களுக்கு 28-ந் தேதி (வியாழக்கிழமை) “தமிழ்ச்செம்மல் விருது” வழங்கப்பட்டது.

அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் காமில் சாஹிப் விருதாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். சங்க தலைவர் தமிழ்ச்செம்மல் கலீபா சாஹிப் தலைமை வகித்தார். சென்னையை அடுத்த தாம்பரம் சைபர் கிரைம் காவல் கண்கானிப்பாளர் ஜரீனா நற்சான்றிதழ் வழங்கினார்.
இதையும் படியுங்கள் : இந்தியா கனடா உறவில் விரிசல் ஏற்பட பாகிஸ்தான் காரணமா ?
நிகழ்ச்சியில் காரை சுப்பையா, காரை கேசவச்சாமி, நாகூர் ஜாகீர் உசேன், நாகை ஆசிக், திரைப்பட இயக்குனர் ரத்னகுமார், அவுரா உமா மகேஷ்வரி, பத்திரிக்கையாளர் அப்சர், அஜிஸ் வாஹிதி, நவ்சாத் பாகவி, குமரவேல், அன்வர் பாஷா, மதிவாணன், ருத்ரநாகராஜன் உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.