அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்சம் கொடுத்து தேர்ச்சி; பேராசிரியர்கள் பணி நீக்கம்
Bribe and pass in Anna University; Dismissal of professors
-
இடைத்தரகர்கள் மூலம் ஒவ்வொரு தாளுக்கும் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை சில பேராசிரியர்கள் லஞ்சம்
-
முறைகேட்டில் ஈடுபட்ட 8 ஆசிரியர்களும் கடந்த ஜனவரி மாதமே பணி நீக்கம் செய்ய முடிவு
சென்னை, ஏப். 21
கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுக்குப் பிறகு, சுமார் 3 லட்சம் பேர் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். அதில், 90,000 பேர் கூடுதல் மதிப்பெண் பெற்று இருந்தனர்.
லஞ்சம் கொடுத்து தேர்ச்சி
இவர்களில் 16,000 பேர் லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாகவும், கூடுதல் மதிப்பெண் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக, இடைத்தரகர்கள் மூலம் ஒவ்வொரு தாளுக்கும் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை சில பேராசிரியர்கள் லஞ்சம் பெற்றது அம்பலமானது.
சிண்டிகேட்
அந்த வகையில், செமஸ்டருக்கு 40 கோடி முதல் 45 கோடி ரூபாய் வரை மாணவர்களிடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் எனப்படும் ஆட்சிமன்ற குழு கூட்டம் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 101 புதிய அறிவிப்புகள்
இதில், உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் லலிதா உள்ளிட்ட ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பதவி இறக்கம், பணி நீக்கம்
இந்த 8 பேரில் மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட மண்டல மையங்களில் உள்ள ஆசிரியர்கள், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோர் அடங்குவர். மேலும் மூத்த பேராசிரியர்கள் 3 பேர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஓய்வு பெறும்போது பேராசிரியர்களாக மட்டுமே ஓய்வு பெறுவார்கள். முறைகேட்டில் ஈடுபட்ட 8 ஆசிரியர்களும் கடந்த ஜனவரி மாதமே பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.