Home செய்திகள் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் : 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் : 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்

0
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் : 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்
Budget Session of Parliament: Union Budget for 2025-26 to be presented tomorrow 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் : 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்

Budget Session of Parliament: Union Budget for 2025-26 to be presented tomorrow 

  • நாடாளுமன்ற பட்ஜெட் முதல்கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 13-ம்தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 10-ல் தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதியுடன் நிறைவடையும்

  • மாத சம்பளதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு இந்த பட்ஜெட்டில் ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படலாம்

புதுடெல்லி, ஜன. 31

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் : 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல்கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 13-ம்தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 10-ல் தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதியுடன் நிறைவடையும். இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

பட்ஜெட்டின் முன்னோட்டமாக கருதப்படும் பொருளாதார ஆய்வறிக்கையும் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்.1) தாக்கல் செய்ய உள்ளார். இதன்மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் பிப்ரவரி 3, 4, 5-ம் தேதி களில் நடைபெறும். அனைத்து கட்சி கூட்டம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, ஜே.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சுரேஷ், கவுரவ் கோகோய், திரிணமூல் காங்கிரஸின் சுதிப் பந்தோபாத்யாய் மற்றும் டெரிக் ஓ பிரயன், திமுக சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு இந்த கூட்டத்தில் அரசுத் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில், நிதி மசோதா2025, வக்பு மசோதா, வங்கி ஒழுங்கு முறை சட்ட திருத்த மசோதா, இந்தியன் ரயில்வே மற்றும் இந்தியன் ரயில்வே வாரிய சட்ட ஒருங்கிணைப்பு மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.

Budget Session of Parliament: Union Budget for 2025-26 to be presented tomorrow 
Budget Session of Parliament: Union Budget for 2025-26 to be presented tomorrow

விமான போக்குவரத்து துறை தொடர்பான நிதி நலன்களை பாதுகாக்கும் மசோதாக்கள், குடியேற்றம், வெளிநாட்டினர் நுழைவு தொடர்பான தற்போதைய விதிமுறைகளை மாற்றும் மசோதாக்கள், கோவா மாநில சட்டப்பேரவை தொகுதிகளில் பட்டியல் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான மசோதா ஆகியவையும் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தற்போதுள்ள குழப்பமான வரி முறைகளை எளிமைப்படுத்தும் விதமாக வருமான வரி தொடர்பான புதிய நேரடிவரி சட்ட (Direct Tax Code) மசோதாவும் அறிமுகமாகும் என தெரிகிறது.

மாத சம்பளதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு இந்த பட்ஜெட்டில் ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படலாம். புதிதாக 2 வரிப் பிரிவுகள் சேர்க்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட்டில் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடும் வகையில் மூலதன செலவினத்துக்கான ஒதுக்கீட்டை 20 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மக்களின் செலவிடும் வருவாய் அதிகரிக்கும் என்பதுடன், அது பொருளாதார சுழற்சிக்கு வித்திடும் என்பது அரசின் மதிப்பீடாக உள்ளது. 2026 மார்ச் இறுதிக்குள் நிதி பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக கட்டுக்குள் வைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்படலாம் என்று யர்னஸ்ட் யங் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.