நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் குடியரசுத் தலைவரை நிதியமைச்சர் சந்தித்து வாழ்த்து பெற்றார்
Budget Session of Parliament: Finance Minister meets President and receives greetings before presenting Budget
-
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட் 2025-26-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மரபு ரீதியிலான நடைமுறைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் பட்ஜெட் காலை 11 மணிக்கு தாக்கல்
-
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் எதிரொலியாக பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின
புதுடெல்லி, பிப். 01
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மரபுப்படி குடியரசுத் தலைவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்தியதாகத் தெரிகிறது.
இதையும் படியுங்கள் : காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தம் ரத்து – மேயர் ஆர்.பிரியா அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் நாடாளுமன்றம் சென்றடைந்தார். தொடர்ந்து அங்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட் 2025-26-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மரபு ரீதியிலான நடைமுறைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் பட்ஜெட் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் எதிரொலியாக பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக தொடக்கத்தின்போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 77,751 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 23,556 புள்ளிகளில் வர்த்தகமானது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.