Home செய்திகள் சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி TSPSC தேர்வு எழுதிய தேர்வர் ; புலனாய்வு படையினர் விசாரணை

சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி TSPSC தேர்வு எழுதிய தேர்வர் ; புலனாய்வு படையினர் விசாரணை

0
சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி TSPSC தேர்வு எழுதிய தேர்வர் ; புலனாய்வு படையினர் விசாரணை

 

சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி TSPSC தேர்வு எழுதிய தேர்வர் ; புலனாய்வு படையினர் விசாரணை

candidate wrote tspsc exam using chatgpt ; investigating forces

  • சாட்ஜிபிடி போன்று அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு தேர்வில் முறைகேடு

  • ஏ.ஐ. டூல்கள் ஏராளமான பலன்களை வழங்கும் போதிலும், இவை ஏற்படுத்தும் அபாயங்களும் அதிகம்

ஐதராபாத், மே. 30

தெலுங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் நடத்தப்படும் TSPSC தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏழு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரில் ஒருவர் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. உதவியோடு இயங்கும் சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி கேள்விக்கான பதில்களை பெற்ற சம்பவம் அம்பலமாகி இருக்கிறது.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, சிறப்பு புலனாய்வு படை நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்தது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள் : கேரளாவில் நிதி மோசடி : கையும் களவுமாக சிக்கினார் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மனைவி

சாட்ஜிபிடி போன்று அதிநவீன தொழில்நுட்பம்

பதில்களை பெற்றதோடு, அவற்றை ப்ளூடூத் இயர்போன் மூலம் மற்ற தேர்வர்களுக்கும் தெரிவித்துள்ளார். சாட்ஜிபிடி போன்று அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு, வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் நாட்டிலேயே முதல் முறையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ஏழு பேருக்கு பதில் அனுப்பிய பூலா ரமேஷ் என்ற நபரை புலனாய்வு படையினர் விசாரணை செய்தது. ரமேஷ் என்ற நபர், தேர்வு தொடங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே வினாத்தாளை எடுத்து, சாட்ஜிபிடி சேவை மூலம் பதில்களை பெற்றுள்ளார்.

முறைகேட்டில் ஈடுபட்ட ஏழு தேர்வர்களும், தேர்ச்சி பெறுவதற்காக ஆளுக்கு ரூ. 40 லட்சம் வரை வழங்க தயாராக இருந்துள்ளனர். அதன்படி மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் ரமேஷ் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட உதவியிருக்கிறார்.

ஏ.ஐ. டூல்களால் ஏற்படும் அபாயம்

தொடர்ந்து இலவசமாகவே கிடைப்பதால், ஏ.ஐ. டூல்களால் ஏற்படும் அபாயம் குறித்த கவலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. சாட்ஜிபிடி மற்றும் மைக்ரோசாஃப்ட் பிங் உள்ளிட்ட ஏ.ஐ. டூல்கள் தற்போது செயலி வடிவிலேயே கிடைக்கின்றன.

ஏ.ஐ. டூல்கள் ஏராளமான பலன்களை வழங்கும் போதிலும், இவை ஏற்படுத்தும் அபாயங்களும் அதிகமாகவே உள்ளன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.