
புதுச்சேரி மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாய பாடமாக்கப்படும்
– முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
CBSE in Puducherry State Tamil will be made a compulsory subject in the syllabus
– Chief Minister Rangaswamy confirmed
-
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வலியுறுத்தி சமூக நல அமைப்புகள் சார்பில் நாளை கல்வித்துறையை முற்றுகையிடும் போராட்டம்
-
அரசு, தனியார் பள்ளிகளில் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கல்வி உரிமை மாநாடு
புதுச்சேரி, மே. 31
புதுவை அரசு பள்ளிகளில் ஏற்கனவே 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும், 11-ம் வகுப்பிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகிறது. இதற்காக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடபுத்தகம் வழங்க அரசு கொள்முதல் செய்து வருகிறது.
அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாட வகுப்புகளை நடத்தும் வகையில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தமிழ் விருப்ப பாடமாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்
மேலும் ஆசிரியர்களும், மாணவர்களும் தயாராகாத சூழ்நிலையில் ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை அறிமுகப் படுத்துவது கல்வியை பாதிக்கும் என்றும் அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வலியுறுத்தி சமூக நல அமைப்புகள் சார்பில் நாளை கல்வித்துறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.
மத்திய அரசு தாய்வழி மொழி கல்விக்கு முக்கியத்துவம்
இந்நிலையில் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்தனர்.
அப்போது, சமூகநல அமைப்பினர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாய்வழி மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையிலும் தாய்மொழி வழி கல்வியை பிரதானப் படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரி
அதோடு, நாடு முழுவதும் மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரியை தொடங்க வேண்டும் என்றும், அதிலும் தாய்மொழியிலேயே மாணவர்கள் மருத்துவம் படிக்க அந்தந்த பிராந்திய மொழிகளில் மருத்துவ கல்வியை தொடங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : பாஜக அரசு அனைத்து மக்களையும் அச்சுறுத்துகிறது -அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
இத்தகைய சூழலில் தமிழை விருப்ப பாடமாக அரசு பள்ளிகளில் வைப்பது மத்திய அரசின் கொள்கைக்கு விரோதம். மேலும், கர்நாடக மாநிலத்தில் சி.பி.எஸ்.இ. கல்வியில் கன்னடம் கட்டாய பாடமாக்கப் பட்டுள்ளது. எனவே புதுவை அரசு பரிசீலனை செய்து தமிழை கட்டாய பாடமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி
இதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம், முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். கல்வித்துறை செயலர் ஜவகரை அழைத்து ஆலோசனையும் நடத்தினர். தொடர்ந்து சமூகநல அமைப்பினரும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தனர்.
அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி, அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்படும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாய பாடமாக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் இருந்து அரசாணை பெறப்பட்டு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும் உறுதியளித்தார்.
கல்வி உரிமை மாநாடு
இதையடுத்து நாளை கல்வித்துறை முற்றுகையிடும் போராட்டத்தை தள்ளி வைப்பதாக சமூக நல அமைப்பினர் தெரிவித்தனர். அதோடு, வருகிற 4-ந்தேதி அவசர கதியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்றும், அரசு, தனியார் பள்ளிகளில் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கல்வி உரிமை மாநாடு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.