மதுரை மருந்து கடைகளில் சிசிடிவி கட்டாயம் | மாவட்ட ஆட்சியர் உத்தரவு
CCTV mandatory in Madurai drug stores District Collector order
-
மதுரை மாவட்ட குழந்தைகள் நல வாரியம் சார்பில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் சிறார்கள் போதைக்கு அடிமையாகுவதை கட்டுப்படுத்த வேண்டும். போதை மாத்திரை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை
-
சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரிக்கை
மதுரை, டிச. 11
மதுரை மருந்து கடைகளில் சிசிடிவி கட்டாயம் | மாவட்ட ஆட்சியர் உத்தரவு ; மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் சிறார்களுக்கான அதிகளவு போதை மாத்திரை மற்றும் போதை டானிக் பயன்படுத்துவதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதையும் படியுங்கள்: ஆஸ்திரேலியாவில் புதிய குடியேற்ற சட்டதிட்டங்கள் அறிவிப்பு
இதையடுத்து மதுரை மாவட்ட குழந்தைகள் நல வாரியம் சார்பில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் சிறார்கள் போதைக்கு அடிமையாகுவதை கட்டுப்படுத்த வேண்டும். போதை மாத்திரை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.
30 நாட்களுக்குள் சிசிடிவி
இந்நிலையில், மதுரையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.