
தமிழக மக்களுக்கு உதவுபவர்க்கே மத்தியில் ஆதரவு – அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி
Central support for those who help the people of Tamil Nadu – AIADMK General Secretary Palaniswami
நாமக்கல், பிப். 09
தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டால் தேசிய அளவில் பார்வை சென்றுவிடுகிறது. மாநிலத்தின் பிரச்சினையை காது கொடுத்து கேட்பது கிடையாது. தமிழக மக்களுக்கு யார் உதவி செய்கிறார்களோ அவர்களுக்கு பிரச்சினையின் அடிப்படையில் மத்தியில் ஆதரவு கொடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
இதையும் படியுங்கள் : ஸ்பெயின் நாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு ; ரூ.3440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நாமக்கல் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் சங்ககிரியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமை வகித்தார். கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி பங்கேற்றுப் பேசியதாவது:அதிமுகதான் ஜனநாயக கட்சி.ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக கூட வரமுடியவில்லை. தற்போது இண்டியா கூட்டணி என முதல்வர் ஸ்டாலின் சொல்ல சொல்ல ஒவ்வொரு கட்சியாக பிரிந்து சென்று கொண்டுள்ளன என்றார். கட்சியின் தொழில்நுட்ப பிரிவுமாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்