
சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அந்தஸ்து சான்று : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் நன்றி
Certificate of permanent status for minority educational institutions: Prof MH Jawahirullah thanks CM Stalin
-
சிறுபான்மை மக்களுக்கான கல்லறைத் தோட்டங்கள் இல்லாத 22 மாவட்டங்களில் அடக்கத்தலங்கள் மற்றும் கல்லறைத் தோட்டங்கள் அமைத்துத் தர மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு முதல்வர் ஸ்டாலின் ஆணை
-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக உருவாக்கப்படும் நகர்புற பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட வேண்டும்
சென்னை, பிப்.09
சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மையின அந்தஸ்து சான்று மற்றும் சிறுபான்மையினருக்கான அடக்கஸ்தலங்களை அமைத்துத் தர ஆணை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :-
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மை அந்தஸ்து சான்று வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதேபோல் சிறுபான்மை முஸ்லிம்களுக்கான அடக்கத்தலம் (கப்ருஸ்தான்) மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மை மக்களுக்கான கல்லறைத் தோட்டங்கள் இல்லாத 22 மாவட்டங்களில் அடக்கத்தலங்கள் மற்றும் கல்லறைத் தோட்டங்கள் அமைத்துத் தர மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு ஆணைகளைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலினுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பிலும், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பிலும் எனது நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையும் படியுங்கள் : முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது – மத்திய அரசு அறிவிப்பு
சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் நீண்ட கால கோரிக்கையான சிறுபான்மை அந்தஸ்து சான்று நிரந்தரமாக வழங்கவேண்டும் என்பது தொடர்பாக தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை வைத்து வந்தது. சட்டமன்றத்திலும் இது குறித்து நான் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இதே போல் அடக்கத்தலங்கள் மற்றும் கல்லறை தோட்டங்கள் தொடர்பாகவும் நாங்கள் கோரிக்கை வைத்து வந்துள்ளோம். கடந்த பிப் 7 அன்று நடைபெற்ற எமது தலைமை பொதுக் குழுவில் இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானமும் நிறைவேற்றினோம்.
சிறுபான்மை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 22 மாவட்ட நிர்வாகங்களுக்கு அடக்கத்தலங்கள் மற்றும் கல்லறை தோட்டங்கள் தொடர்பாக உத்தரவு பிறப்பித்தமைக்கு எமது நெஞ்சார்ரந்த நன்றி. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக உருவாக்கப்படும் நகர்புற பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்