Home செய்திகள் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு | வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு | வானிலை ஆய்வு மையம்

0
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு | வானிலை ஆய்வு மையம்
the regional meterological dept

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு | வானிலை ஆய்வு மையம்

Chance of heavy rain for 2 days due to low circulation | Meteorological Centre

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்

சென்னை , செப்.21

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு | வானிலை ஆய்வு மையம்:சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி,திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள் : அண்ணாவை தேவர் மன்னிப்பு கேட்க சொல்லவில்லை | அ. இ. பார்வர்டு பிளாக் கட்சி வி.எஸ்.நவமணி விளக்கம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

நாளை 22-ந்தேதியும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.