
அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளின் 161 காலியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Chief Minister M.K.Stalin issued appointment order for 161 vacancies of Anna University Colleges.
-
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு குழுக்களால் தேர்வு செய்யப்பட்ட 161 நபர்களுக்கு அண்ணா பல்கலைகழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல்
-
நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை, மே .03
அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி. கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகிய நான்கு கல்லூரிகளிலும் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும்
உடற்கல்வி துணை இயக்குநர், துணை நூலகர் போன்ற பிற பணியாளர் பணியிடங்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு குழுக்களால் தேர்வு செய்யப்பட்ட 161 நபர்களுக்கு அண்ணா பல்கலைகழக ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் உறுதியா ?
பணிநியமன ஆணைகள்
தேர்வு செய்யப்பட்ட 161 உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்