Home செய்திகள் தமிழ்நாடு சுற்றுலா துறையில் புதிய சேவைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு சுற்றுலா துறையில் புதிய சேவைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

0

தமிழ்நாடு சுற்றுலா துறையில் புதிய சேவைகள்| முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Chief Minister M. K. Stalin launched new services in Tamil Nadu tourism sector.

  • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான வசதிகளை, கட்டமைப்புகளை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது.

  • தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப்பயிற்சியில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பு மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணைய தளத்தினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை, செப் 26

தமிழ்நாடு சுற்றுலா துறையில் புதிய சேவைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் : ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு ஏற்ற இடமாக தமிழ்நாட்டை உயர்த்துவதையும், சுற்றுலா பயணிகளின் தங்கும் காலத்தை அதிகரிப்பதையும், அன்னிய செலாவணியை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான வசதிகளை, கட்டமைப்புகளை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா கொள்கை-2023யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் வெளியிட்டார். இந்தக்கொள்கையானது சுற்றுலா திட்டங்களுக்கு தொழில் அந்தஸ்தை வழங்குகிறது, இதன்மூலம் இதுவரை தொழில்துறை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே பலன்களை சுற்றுலா துறைக்கும் விரிவுபடுத்தி, சுற்றுலாத்துறையில் ஈடுபட்டு வரும் பல்வேறு நிலையிலான பங்குதாரர்களின் நீண்டகால கோரிக்கையை சுற்றுலா கொள்கை பூர்த்தி செய்கிறது.

நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ், தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப்பயிற்சியில் பதிவு செய்வதற்கான இணைய இணைப்பு மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த இணைய தளத்தினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.