
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் 1.06 கோடி பெண்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே வாழ்த்து கடிதம்
Chief Minister M. K. Stalin’s separate congratulatory letter to Women’s Entitlement Scheme benefit 1.06 crore women
-
இனி மாதம்தோறும், ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும்.
-
இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை, உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை”
சென்னை, செப். 22
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் 1.06 கோடி பெண்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே வாழ்த்து கடிதம் : கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதியின்படி தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கான மாதாந்திர உரிமை தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திட்டம் தொடங்கி வைப்பதற்கு முன்னதாகவே, பலருக்கு ரூ.1000 தொகை அனுப்பி வைக்கப்பட்டது. இதனால், பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதன்பிறகு, உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : வரும் ஞாயிறு முதல் சென்னை எழும்பூர்-திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் சேவை
அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் 1.06 கோடி பெண்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதலமைச்சரின் வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், “இனி மாதம்தோறும், ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும். கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரமே இத்தொகையாகும். இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை, உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.