Wednesday, December 18, 2024

துரைமுருகனின் மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த் பேச்சை கண்டித்தார் முதல் அமைச்சர் ஸ்டாலின்

துரைமுருகனின் மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த் பேச்சை கண்டித்தார் முதல் அமைச்சர் ஸ்டாலின்

Chief Minister Stalin condemned Duraimurugan’s son and candidate Kathir Anand’s speech

  • சமீபத்தில், வேலூர் தொகுதியில் வாக்கு சேகரித்த துரைமுருகனின் மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த், பெண்களை பார்த்து, நீங்கள் பளபளப்பாக மினுமினுப்பாக இருக்கிறீர்களே, எப்படி ?

  • தேர்தல் நெருங்க நெருங்க திமுக தலைவர் ஸ்டாலினின் கவனத்துக்கு வருகிற புகார்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறதாம். அந்த பஞ்சாயத்தை தீர்த்து வைப்பதில் ஒவ்வொரு இரவும் அவருக்கு நீண்ட இரவாக இருக்கிறது என்கிறார்கள் திமுகவினர்.

சென்னை, ஏப். 03

சமீபத்தில், வேலூர் தொகுதியில் வாக்கு சேகரித்த துரைமுருகனின் மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த், பெண்களை பார்த்து, நீங்கள் பளபளப்பாக மினுமினுப்பாக இருக்கிறீர்களே என்றார். தேர்தல் பிரச்சார களத்தில் இது பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் நெருங்க நெருங்க திமுக தலைவர் ஸ்டாலினின் கவனத்துக்கு வருகிற புகார்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறதாம். அந்த பஞ்சாயத்தை தீர்த்து வைப்பதில் ஒவ்வொரு இரவும் அவருக்கு நீண்ட இரவாக இருக்கிறது என்கிறார்கள் திமுகவினர்.

இந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் வேறு, தேர்தல் சமயத்தில் எதைபேசவேண்டும் . எதை பேசக்கூடாது என்று தெரியாமல், காமெடியாக பேசுகிறோம் என்கிற பாணியில் எதையாவது உளறி வைத்துவிடுகிறார்கள். அது நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அப்படிப்பட்ட விவகாரங்களையும் கவனிப்பதில் ஸ்டாலினுக்கு தாவு தீர்ந்து விடுகிறதாம்.

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒரு நாளைக்கு 2 தொகுதிகளில் வலம் வருகிறார். பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் அதே சமயத்தில், கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளையும் அரவணைத்து வேட்பாளர் அறிமுக கூட்டங்களை திமுக நடத்தி வருவதையும் உன்னிப்பாக கவனிக்கும் ஸ்டாலின், இத்தகைய கூட்டங்களில் சர்ச்சைகள், வருத்தங்கள், ஆதங்கங்கள், உள்ளடி வேலைகள் என எதுவாக இருப்பினும் ஸ்டாலினுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில், வேலூர் தொகுதியில் வாக்கு சேகரித்த துரைமுருகனின் மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த், பெண்களை பார்த்து, நீங்கள் பளபளப்பாக மினுமினுப்பாக இருக்கிறீர்களே, எப்படி ? மகளிர் உரிமைத் தொகை மாசம் 1000 ரூபா கிடைக்கிறது தானே ? என்று கூறினார். அதை வைத்து ஃபேர் அண்ட் லவ்லி, பவுடர் வாங்குகிறீகள். அதனால் தான் பளபளன்னு இருக்கிறீர்கள் என்கிற ரீதியில் பேசினார்.

அவரது பேச்சு அவரை சுத்தி இருக்கிறவர்களை சிரிக்க வைத்தாலும், பெண்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இந்த விவகாரத்தை துரைமுருகனுக்கு எதிரான வேலூர் உடன்பிறப்புகள் பலரும் அறிவாலயத்தில் புகாராக தெரிவித்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள் : தேர்தல் பிரச்சாரத்துக்காக ஏப்ரல் 12ம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழகம் வருகை

வேட்பாளரே மூன்றாம் தர பேச்சாளர் மாதிரி பேசினால், நாங்களெல்லாம் பெண்களிடம் ஓட்டுக்கேட்டு எப்படி செல்ல முடியும்? என்று புகாரில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

இதனை ஸ்டாலினின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல, துரைமுருகனை தொடர்புகொண்டு, ’’வேலூரில் ஏகப்பட்ட பிரச்சனை இருப்பதும், கதிருக்கு மீண்டும் சீட் கொடுக்கக்கூடாது என எதிர்ப்புகள் அதிகம் வந்ததும் உங்களுக்கே தெரியும். இதையெல்லாம் மீறித்தான் உங்களுக்காக கதிருக்கு மீண்டும் சீட்டுக்கு ஓ.கே. பண்ணினேன். அவருடைய வெற்றியை தடுக்க ஏ.சி.சண்முகம் மெனக்கெட்டு வருகிறார். இதையெல்லாம் தெரிந்து, தொகுதியிலுள்ள அதிருப்திகளை போக்க வைத்து கதிருக்கு சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கிறேன்.

ஆனா, இதைப்பத்தி எல்லாம் கவலைப்படாமல், அவர் பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கிட்டு இருக்காரே, இதெல்லாம் நல்லாவா இருக்கு அண்ணே ? எப்படி பிரச்சாரம் பண்ணனும்னு நீங்கள் சொல்லலையா? ஈசியா நாம் ஜெயிக்கிற இடத்தை கதிரின் வாய்த்துடுக்கால கெடுத்துக்க வேண்டாம்னு சொல்லுங்க ‘’ என்று கண்டிப்பு காட்டியிருக்கிறார் ஸ்டாலின்.

அதேசமயம், கதிர் ஆனந்தை ஃபோனில் பிடித்தும் அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அதேபோல, துரைமுருகனும் கதிரை கண்டித்துள்ளார். இதனையடுத்து, ஒவ்வொரு நாளும் பிரச்சாரத்துக்கு செல்லும் போது, எதை எதை பேசணும், எப்படி பேசணும்னு டியூசன் எடுக்கிறாராம் துரைமுருகன்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles